புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவை கொடுத்து வருகிறது. அதற்கு ஏற்ப விற்பனையிலும் தொடர்ந்து மிக வலுவான சந்தையை வைத்து இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில் புதிய தலைமுறை மாடலாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் வரும் 28ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரஷ்லேன் தள செய்தி தெரிவிக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாகவும், வசதிகளில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. சில டிசைன் அம்சங்கள் ஹூண்டாய் வெனியூ காரை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்பு, புரொஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், சுறாத் துடுப்பை பிரதிபலிக்கும் ஆன்டெனா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

இந்த காரில் முற்றிலும் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெறுகிறது. புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு க்ளவ்பாக்ஸ் ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஐஎம்டி கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் மிக முக்கிய அம்சமாக புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் இடம்பெற இருக்கிறது. வெளியில் இருந்தே கார் எஞ்சின், ஏசி சிஸ்டம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும். ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்பங்களை வழங்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது?

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, டாடா அல்ட்ராட்ஸ், ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
According to reports, Hyundai is planning to launch new Elite i20 car in India on 28th Oct, 2020.
Story first published: Tuesday, October 6, 2020, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X