அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

புதிய டாடா அல்ட்ராஸ் என போட்டி மாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 2020 ஐ20 மாடலை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளாவிய சந்தையில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த 2020 மாடலின் புதிய ஸ்பை வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

இந்த வீடியோவின் மூலம் ஐ20 மாடலின் புதிய இந்திய வெர்சன் கார் சர்வதேச சந்தையில் உள்ள மாடலுடன் ஒத்த கேபின் அமைப்பை பெற்றிருப்பது தெரிய வருகிறது. இந்த காரின் உட்புறத்தில் உள்ள 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் 2020 க்ரெட்டா மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

இந்த ஸ்டேரிங் சக்கரத்துடன் காரின் உள்ளே கவனிக்கத்தக்க வகையில் ஆடி-எஸ்க்யூ ஏர்கான் வெண்ட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 10.25 இன்ச் ஃப்லோட்டிங் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டராக நீண்டுள்ளது.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

இவற்றுடன் 2020 ஐ20 மாடலின் உட்புறத்தில் ப்ளூலிங்க் கார் தொழிற்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை இணைக்கும் வசதி, க்ரூஸ் கண்ட்ரோல், போஸ் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்பட வழக்கமான ட்ரைவ் மோட்களையும் ஹூண்டாய் நிறுவனம் அப்படியே வழங்கியுள்ளது.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

உட்புறம் மட்டுமின்றி காரின் வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களையும் வெளியாகியுள்ள இந்த புதிய வீடியோ வெளிக்காட்டுகிறது. எல்இடி தரத்தில் ஹெட்லைட்ஸ் மற்றும் நடுவே மேடான டிசைனுடன் க்ரில்லை முன்புறத்தில் கொண்டுள்ள இந்த 2020 மாடலின் இந்திய வெர்சனில் சர்வதேச மாடலில் உள்ளதை போல் 17 இன்ச் அலாய் சக்கரத்திற்கு பதிலாக 16-இன்ச்சில் அலாய் சக்கரம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

இதேபோல் ஐ20 மாடலின் இந்த தலைமுறை காரில் கியா செல்டோஸின் 1.5 லிட்டர் சிஆர்டிஐ என்ஜினின் துண்டிக்கப்பட்ட வெர்சனாக டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. தற்போதைய 1.4 லிட்டர் சிஆடிஐ என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவில்லை.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

வெளிநாட்டு சந்தைகளில் உள்ள ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜின் தேர்வுகள் இந்திய வெர்சன் காரிலும் பொருத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

இதில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 120 பிஎச்பி என்ற இரு ஆற்றல் அளவுகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இவற்றுடன் கூடுதல் எரிபொருள் திறனிற்காக மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தையும் ஹூண்டாய் வழங்கவுள்ளது.

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 1.0 லிட்டர் பெட்ரோலுக்கு 6-ஸ்பீடு மேனுவல்/7-ஸ்பீடு டிசிடி என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படவுள்ளன. கொரோனா வைரஸினால் இதன் அறிமுகம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதால் சந்தையில் புதிய ஐ20 மாடலை இந்த வருட இறுதிக்குள்ளாக பார்க்கலாம்.

ப்ரீமியம் மாடலாக களமிறங்கவுள்ள இந்த ஹூண்டாய் ஐ20 மாடலின் தற்போதைய தலைமுறை கார் எக்ஸ்ஷோரூமில் ரூ.5.60 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது. டாடா அல்ட்ராஸ் மட்டுமின்றி ஐ20 மாடலுக்கு மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற போட்டி கார்களும் சந்தையில் உள்ளன.

Source: Power Stroke PS

Most Read Articles
English summary
2020 Hyundai i20 Spy Shots Confirm A Cabin Design Similar To The Global Version
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X