ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

டிஜிட்டல் க்ளஸ்ட்டர் & சன்ரூஃப் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 காரின் ஸ்பை படங்கள் டீலர்ஷிப் மையத்தின் வளாகத்திற்குள் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. அடுத்த மாதத்தில் இதன் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஹேட்ச்பேக் காரின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

அதுமட்டுமில்லாமல் டீலர்ஷிப் ஷோரூம்களையும் இந்த கார் சென்றடைந்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் தற்போது காடிவாடி செய்திதளம் மூலமாக புதிய ஐ20-ன் ஸ்பை படங்கள் டீலர்ஷிப் மையத்தில் இருந்து வெளியாகியுள்ளன.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

இந்த ஸ்பை படங்களில் காரின் கேபின் கிட்டத்தட்ட அதன் சர்வதேச மாடலில் உள்ளதை போன்று தான் காட்சியளிக்கிறது. மைய ஏசி துளைகள் மிகவும் நேர்த்தியாக டேஸ்போர்டு உடன் இணைக்கப்பட்டுள்ளன. கேபினில் உள்ள 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தான் முதலில் நமது கண்களை கவர்கிறது.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

ஏனெனில் இது தான் தற்போதைய ஹேட்ச்பேக் கார்கள் கொண்டிருக்கும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டங்களிலேயே மிக பெரியதாக விளங்கவுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஐ20-ல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்படவுள்ளது.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

ஆனால் சர்வதேச மாடலில் உள்ள கட்டமைக்கக்கூடிய அலகு இந்த க்ளஸ்டரில் இருக்காது. இதனால் 2020 ஹூண்டாய் வெர்னாவில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரை புதிய ஐ20 காரில் எதிர்பார்க்கலாம். ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரை தொடர்ந்து 2020 ஐ20 காரும் சன்ரூஃப்-ஐ பெற்று வருகிறது.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20-இன் கேபின் லெதர் உள்ளமைவுடன் இரட்டை-நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங், சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், போஸ் ஸ்டேரியோ சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், முன் & பின் இருக்கை வரிசைகளின் மையத்தில் ஆர்ம் ரெஸ்ட் மற்றும் இன்-கேபின் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக இருக்கும்.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

புதிய ஐ20 ஹேட்ச்பேக் காருக்கு மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில் 1.2 லிட்டர், இன்லைன்-4 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

இரண்டாவது என்ஜின் தேர்வான 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 என்ஜின் 120 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படலாம். கடைசியாக, 1.5 லிட்டர், இன்லைன்-4, டர்போ-டீசல் என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

ஷோரூம் வளாகத்திற்குள் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்! உள்ளே தொடுத்திரை இவ்ளோ பெரிசாவா?

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20-ன் விலையை ரூ.5.5 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்ஸா உள்ளிட்டவற்றுடன் விற்பனையில் மல்லுக்கட்டவுள்ள புதிய ஐ20 தற்போது ஷோரூம்களுக்கு வந்தடைந்துள்ளதால் ஏற்கனவே கூறியதுபோல் இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
2020 Hyundai i20 Spied At Dealership, Gets Digital Cluster & Sunroof
Story first published: Saturday, October 24, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X