எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

ஒளிரும் எல்இடி டெயில்லைட்களுடன் 2020 ஹூண்டாய் ஐ20 இரவு நேரத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை ஐ20-ன் சோதனை பணிகளை பல மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. தற்போதைய ஐ20-க்கு மாற்றாக இதன் புதிய தலைமுறை கொண்டுவரப்படுகிறது.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

ஹூண்டாய் ஐ20 இந்திய சந்தையில் நல்ல வரவேற்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் காராக உள்ளது. ஐரோப்பாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இதன் புதிய தலைமுறை காரை இந்தியாவில் இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

மூன்றாம் தலைமுறை ஐ20 ஹேட்ச்பேக்கின் தற்போதையை சோதனை ஓட்ட ஸ்பை படங்களை ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ளது. இதில் சோதனை கார் புதிய ஐ20-ன் டாப் வேரியண்ட்டாக இருக்கலாம். சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு அருகே இரவு நேரத்தில் இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

ஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும், பக்கவாட்டு பகுதி தற்போதைய எலைட் ஐ20 மாடலை தான் பெரும்பான்மையாக ஒத்து காணப்படுகிறது. ஆனால் முன் & பின் பகுதிகளின் டிசைன்கள் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் புதிய எல்இடி தரத்தில் உள்ளன.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

பின்பக்கத்தில் நம்பர் தட்டு சற்று கீழே பம்பரில் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் புதிய தலைமுறை ஐ20-ல் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. ஆனால் இவை இதன் இந்திய வெர்சனில் வழங்கப்படும் என்பது தெரியவில்லை. மற்றொரு முக்கிய அம்சமாக ஒஆர்விஎம்-ன் டிசைன் மாற்றப்பட்டுள்ளது.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

இது பிஎம்டபிள்யூவின் எம் லைன் தயாரிப்புகளில் உள்ளதை போன்று புதிய ஐ20 வழங்கப்பட்டுள்ளது. என்ஜின் அமைப்பிற்கு வந்தால், புதிய ஹூண்டாய் ஐ20 பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 118 பிஎச்பி மற்றும் 173 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூன்றாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கியா செல்டோஸிலும் வழங்கப்படுகிறது.

எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..?

ஆனால் புதிய ஐ20-ல் டி-ட்யூன் வெர்சனாக இந்த டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இவற்றில் பெட்ரோல் என்ஜின்களுக்கு மேனுவல், ஐஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம், ஆனால் டீசல் என்ஜினிற்கு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட வாய்ப்பில்லை.

இவ்வாறு ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகமாகலாம்.

Most Read Articles

English summary
2020 Hyundai i20 LED Tail Lights Detailed During Night Testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X