புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் நவீன தொழில்நுட்பத்திலும், வசதிகளிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை வேரியண்ட் வாரியாக இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் விலை, வசதிகளை பொறுத்து மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா, அஸ்ட்டா ஆப்ஷனல் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதில், ஒவ்வொரு வேரியண்ட்டிலும் என்னென்ன வசதிகள் உள்ளன, எஞ்சின் கியர்பாக்ஸ் தேர்வு மற்றும் விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

புதிய ஐ20 மேக்னா வேரியண்ட்

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் விலை குறைவான வேரியண்ட்டாக வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் ஹாலஜன் புரோஜெக்டர் ஹெட்லைட்டுகள், 15 அங்குல ஸ்டீல் வீல்கள் உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

மேலும், எல்இடி பகல்நேர விளக்குகள், 2 டின் ஆடியோ சிஸ்டம், ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ரியர் ஏசி வென்ட்டுகள், கூல்டு க்ளவ் பாக்ஸ் டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஸ்டீயரிங் வீல், புரொஜெக்டர் பனி விளக்குகள், ரியர் யுஎஸ்பி சார்ஜர், மேனுவல் ஏசி சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி, ஃபோல்டபிள் சாவி, இரண்டு ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் ஏபிஎஸ் சிஸ்டம் ஆகியவை உள்ளன. பெட்ரோல் மேனுவல் மேக்னா வேரியண்ட் ரூ.6.79 லட்சத்திலும், டீசல் மேனுவல் மேக்னா வேரியண்ட் ரூ.8.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்

இந்த நடுத்தர வகை வேரியண்ட்டானது 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் (ரூ.7.59 லட்சம்) மற்றும ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (ரூ.8.59 லட்சம்) தேர்வுகளில் கிடைக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் (ரூ.8.79 லட்சம்), டீசல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் (ரூ.8.99 லட்சம்) இந்த வேரியண்ட் வழங்கப்படுகிறது. மேக்னா வேரியண்ட்டில் உள்ள வசதிகளுடன் சேர்த்து, இந்த வேரியண்ட்டில் கூடுதலாக 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், சுறா துடுப்பு வடிவ ஆன்டென்னா, 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

மேலும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். வாய்ஸ் ரெககனிஷன், ஏர் பியூரிஃயர், லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, டர்போ மாடலில் மெட்டல் பெடல்கள், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ரியர் பார்சல் டிரே, எல்இடி டெயில் லைட்டுகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ரியர் கேமரா, ரியர் டீஃபாகர் வசதிகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

அஸ்ட்டா வேரியண்ட்

புதிய ஐ20 காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் (ரூ.8.69 லட்சம்) மற்றும் ஐவிடி ஆட்டோமேட்டிக் மாடல்களில் (ரூ.9.69 லட்சம்) இந்த வேரியண்ட் கிடைக்கும். தவிரவும், 1.0 லிட்டர் டர்போ ஐஎம்டி மாடல் (ரூ.9.89 லட்சம்) மற்றும் டிசிடி (ரூ.10.66 லட்சம்) ஆகிய எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த வேரியண்ட் வழங்கப்படுகிறது. கூடுதலாக படூல் விளக்குகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதி, ஸ்மார்ட் கீ, ஸ்மார்ட் வாட்ச், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கார்னரிங் விளக்குகள், க்ரோம் பூச்சுடன் கூடிய கதவு கைப்பிடிகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

மேலும், புஷ் பட்டன் ஸ்டார்ட், வயர்லெஸ் சார்ஜர், போஸ் ஸ்பீக்கர் சிஸ்டம், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஆம்பியண்ட் லைட் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

அஸ்ட்டா ஆப்ஷனல்

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் கூடுதலாக பக்கவாட்டு பாதுகாப்புக்கான சைடு மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஆர்ம் ரெஸ்ட், அட்ஜெஸ்ட்டபிள் ரியர் ஹெட்ரெஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.9.19 லட்சத்திலும், டீசல் மேனுவல் வேரியண்ட் ரூ.10.59 லட்சம் விலையிலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டிசிடி மாடல் ரூ.11.17 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 6, 2020, 20:23 [IST]
English summary
Here are the variant wise features of new generation Hyundai i20 car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+