சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் அதன் சிஎன்ஜி தேர்வை விரிவுப்படுத்தும் விதமாக சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம், அதன் சிஎன்ஜி தேர்வை விரிவுப்படுத்தும் விதமாக கூடுதலாக இரு புதிய வேரியண்டுகளை சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சேன்ட்ரோ கார் மாடலிலேயே இரு விதமான சிஎன்ஜி தேர்வுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் விற்பனைச் செய்யப்படும் ஆரம்ப நிலை கார் மாடல்களில் சேன்ட்ரோவும் ஒன்று.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த காரில் சிஎன்ஜி தேர்வு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சேன்ட்ரோ மேக்னா சிஎன்ஜி மற்றும் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி ஆகிய இரு தேர்வுகளே தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், மேக்னா சிஎன்ஜிக்கு ரூ. 5.87 லட்சம் என்ற விலையும், ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிக்கு ரூ. 6 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். தற்போது பெட்ரோல்-டீசல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் மாடல்களையே சிஎன்ஜி-யாக மாற்றி ஹூண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால், அந்த கார்களில் என்ன மாதிரியான அம்சங்கள் மற்றும் வசதிகள் இடம் பெற்றிருக்கின்றனவோ அவையேதான் புதிய சிஎன்ஜி தேர்வுகளிலும் காணப்படுகின்றது.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதில், ஹூண்டாய் சேன்ட்ரோ மேக்னா சின்ஜி கார், 2 டின் ஆடியோ சிஸ்டம், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள், மேனுவல் ஏசி, ப்ளூடூத் வழியாக ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி உள்ளிட்ட ஏராளமான அம்சங்களைப் பெற்றிருக்கின்றது. இதேபோன்று, ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி வேரியண்டிலும் எண்ணற்ற அம்சங்கள் தெண்படுகின்றன.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றது. அது, ஆப்பில் கார்பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியைக் கொண்டிருக்கின்றது. இதன்மூலம் நேவிகேஷன் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளையும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இத்துடன், மின்சார பொத்தான்களால் கட்டுப்படுத்தக்கூடிய கண்ணாடிகள் (இதிலேயே டர்ன் இன்டிகேட்டர்களும் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன), பனி மின் விளக்கு, கீ-லெஸ் என்ட்ரீ உள்ளிட்ட சிறப்பு வசதிகள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஒரு சில வித்தியாசங்களை மட்டுமே தாங்கிக் கொண்டிருக்கும் இந்த கார்கள் எஞ்ஜின் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அதாவது இரு கார்களிலும், 1.1 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிஎன்ஜி எஞ்ஜின் அதிகபட்சமாக 60 பிஎச்பி மற்றும் 85 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அதேசமயம், பெட்ரோல் தேர்வில் காணப்படும் சேன்ட்ரோ கார் அதிகபட்சமாக 69 பிஎச்பி திறனையும், 99 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இது சிஎன்ஜி தேர்வைக் காட்டிலும் சற்று அதிகம் ஆகும். மேற்கூறிய இந்த மாற்றங்களைத் தவிர சிஎன்ஜி சேன்ட்ரோ கார்களில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவேதான் ஹூண்டாய் நிறுவனம் தற்போது கிடைக்கும் சிஎன்ஜி தேர்வை விரிவுப்படுத்தும் விதமாக சேன்ட்ரோவில் மேலும் இரு வேரியண்டுகளை சிஎன்ஜி எஞ்ஜினில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த இரு சிஎன்ஜி சேன்ட்ரோ கார்களிலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, முன்பக்கத்தில் ஏர் பேக், தீயணைப்பான்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த புதிய சிஎன்ஜி தேர்வுகள் இந்தியாவில் ஏற்கனவே சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கும் கார்களுக்கு போட்டியாக அமர்ந்துள்ளது.

சேன்ட்ரோவில் இரு புதிய சிஎன்ஜி தேர்வுகள் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அதுமட்டுமின்றி, மாருதி சுசுகி செலிரியோ, மாருதி சுசுகி வேகன் ஆர் மற்றும் டாடா டியாகோ உள்ளிட்ட கார்களுக்கும் அது போட்டியாக அமைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கும் சேன்ட்ரோவில் இந்த தேர்வு வழங்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
New Hyundai Santro CNG Variants Launched In India: Prices Start At Rs 5.87 Lakh. Read In Tamil.
Story first published: Tuesday, October 13, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X