புதிய ஹூண்டாய் வெர்னா காரின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!
புதுப்பொலிவுடன் வர இருக்கும் ஹூண்டாய் வெர்னா காரின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் டாப் -3 கார்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா கார் உள்ளது. இந்த நிலையில், அதிகரித்துள்ள சந்தைப் போட்டியை மனதில் வைத்து ஹூண்டாய் வெர்னா கார் பொலிவு கூட்டப்பட்டு வருகிறது. மேலும், பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளிலும் வர இருக்கிறது.

அடுத்த மாதம் புதிய ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் முதல் டீசர் படங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் டிசைன் அதிக மாற்றங்களுடன் வருகிறது. ரஷ்யாவில் சோலரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட வெர்னா கார்தான் இந்தியாவிலும் சில மாற்றங்களுடன் வர இருக்கிறது.

குறிப்பாக, முகப்பு டிசைன் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், முரட்டுத்தனமாக தோற்றமளிக்கும் பம்பர் டிசைனுடன் மாற்றம் கண்டுள்ளது.

பக்கவாட்டில் கூரை அமைப்பு மிக நேர்த்தியாக மாற்றம் கண்டுள்ளது. கவரும் அலாய் வீல்கள், அ:த்தும் டெயில் லைட்டுகள், உப்பலான பம்பர் அமைப்புடன் ஹூண்டாய் வெர்னா கார் வசீகரமாக மாறி இருக்கிறது. தோற்றத்தில் பெரிய காராகவும் தெரிகிறது.

இந்த காரின் உட்புற படங்கள் வெளியிடப்படவில்லை. இந்த காரில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வெனியூ காரில் இருப்பது போன்ற புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வென்டிலேட்டட் இருக்கைகள், அர்கமிஸ் பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. இதன் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வரும் ஏப்ரலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மிக விரைவில் இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








