புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹூன்டாய் வெர்னா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டிசைன், அதிக வசதிகள், புதிய எஞ்சின் தேர்வுகளுடன் வந்துள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

வயர்லெஸ் சார்ஜர்

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயமாக புதிய ஹூண்டாய் வெர்னா காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

புளூலிங்க் செயலி

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் புளூலிங்க் என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலமாக 45 விதமான வசதிகளை பெற முடியும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் வெளியில் இருந்தே எஞ்சினை ஆன் செய்வது, ஏசியை இயக்குவது, வாய்ஸ் கமாண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த செயலிக்காக பிரத்யேக ஸ்மார்ட் வாட்ச் ஒன்றும் வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

ரியர் வியூ மானிட்டர்

ஹூண்டாய் வெர்னா காரில் ஓட்டுனருக்கான பிரத்யேக ரியர் வியூ மானிட்டர் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக பின்னால் வரும் வாகனங்களை ரியர் வியூ மிரர்களைவிட இதன் மூலமாக பார்க்கும் வசதி உண்டு. பொதுவாக ரிவர்ஸ் கியர் போட்டால்தான் பல வாகனங்களில் ரியர் கேமரா மூலமாக திரையில் பார்க்க முடியும். ஆனால், ரிவர்ஸ் கியர் போடாமலேயே இந்த வசதியை பெற முடியும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 4.2 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது காரின் மதிப்பை உயர்த்தும் விஷயமாக கூறலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம்

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய இந்த ஆடியோ சிஸ்டம் விலை உயர்ந்த வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது. இது மிகச் சிறந்த ஒலி தரத்தை வழங்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

புதிய எஞ்சின்கள்

ஹூண்டாய் வெர்னா கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் டிசிடி கியர்பாக்ஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அட்டகாசமான 5 விஷயங்கள்!

விலை விபரம்

புதிய ஹூண்டாய் வெர்னா கார் ரூ.9.31 லட்சம் முதல் ரூ.15.10 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மாருதி சியாஸ், விரைவில் வரும் புதிய ஹோண்டா சிட்டி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Here are the top 5 features of the new Hyundai Verna facelift model launched in India.
Story first published: Wednesday, April 1, 2020, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X