எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட்டின் விலை பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் குறித்து விரிவாக இந்த செய்தியில் காண்போம். 

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

புத்துணர்ச்சியான உட்புற மற்றும் வெளிப்புற டிசைனை பெற்றிருந்தாலும், முந்தைய மாடல்களில் இருந்த அதே தோற்றத்தை அப்படியே இந்த செடான் கொண்டுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை குறித்து நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள தகவலின்படி, புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்ஷோரூமில் ரூ.9.30 லட்சத்தை ஆரம்ப விலையாக பெறவுள்ளது.

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஒ) என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையாகவுள்ள வெர்னா ஃபேஸ்லிஃப்ட், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் தேர்வுகளையும் பெற்றுள்ளது. இந்த வகையில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் பொருத்தப்படவுள்ளன.

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

ஹூண்டாயின் சமீபத்திய அறிமுகமான க்ரெட்டா மாடலிலும் வழங்கப்பட்டிருந்த இந்த இரு என்ஜின்களுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டான எஸ்எக்ஸ் (ஒ)-ற்கு மட்டும் கூடுதலாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வும் வழங்கப்படவுள்ளது.

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

இந்த டாப் டர்போ-பெட்ரொல் வேரியண்ட் ரூ.13.99 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் அனைத்து என்ஜின் தேர்வுகளும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் 115 பிஎச்பி பவரை 144 என்எம் மற்றும் 250 என்எம் டார்க் திறனுடன் முறையே வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினானது 120 பிஎச்பி பவரை 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் காருக்கு வழங்கவுள்ளது.

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

விலை மற்றும் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் மட்டுமில்லாமல் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப வசதிகள் குறித்தும் தற்போது வெளியாகியுள்ள இந்த காரை பற்றிய ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன்படி எல்இடி தரத்தில் டிஆர்எல்களுடன் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்களை பெற்றுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ கொண்டுள்ளது.

READ READ:உயிரை துச்சமென நினைத்து களத்தில் இறங்கிய 25 பெண்கள்.. சூடுபிடிக்கும் கொரோனாவிற்கு எதிரான போராட்டம்..

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

காரின் உட்புறம், தேவைக்கு ஏற்றாற்போல் மடக்கும் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், டர்ன் இண்டிகேட்டர்களுடன் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய 4-இன்ச் டிஎஃப்டி திரை, சில கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பெடல் ஷிஃப்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

MOST READ:இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

இவற்றுடன் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பாதுகாப்பு அம்சங்களாக டயரின் அழுத்தத்தை கணக்கிடும் சிஸ்டம், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் கேமிரா/சென்சார்ஸ் போன்றவை பொருத்தப்ப்பட்டுள்ளன.

MOST READ:கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

புதுமையான டிசைன் மற்றும் அதிகளவிலான தொழிற்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதால் செடான் பிரிவில் சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் பிரபலமான மாடலாக உள்ள ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற செடான் கார்கள் உள்ளன.

Source: Team BHP

Most Read Articles

English summary
New (2020) Hyundai Verna Facelift Prices Leaked: Here Are All The Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X