நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் பிரபல ஹீரோவின் படத்திற்காக கடும் பயிற்சியில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்..
பெரும்பாலான ஆக்சன் மூவி விரும்பிகள் ஆவலோடு காத்திருக்கும் ஓர் திரைப்படத்திற்காக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் கார் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹாலிவுட் திரைப்படங்கள் பலவற்றிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்தவகையில் விரைவில் வெளிவரவிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டூ டை' என்ற படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவல் நிலவுகின்றது.

இந்த படத்தில் விறு விறுப்பான ஆக்சன் மற்றும் துப்பாக்கி சண்டை காட்சிகளுக்கு குறைவே இருக்காது. இதன்காரணத்தினாலயே இப்படத்திற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பிரியர்களாக இருக்கின்றனர்.

அதேசமயம், இப்படத்தில் வரும் கார்கள்கூட விசித்திரமான தோற்றம் மற்றும் திறன் கொண்டவையாக காட்சியளிக்கும். சிலர், இந்த கார்களை ரசிப்பதற்காகவே படத்திற்கு வருகை தருவது உண்டு. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் வாகனங்கள்மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் பலர் ஜேம்ஸ்பாண்டின் திரைப்படம் மற்றும் ஃபாஸ்ட் ப்யூரியஸ் போன்ற படங்களைத் தவிரவிடுவதே இல்லை.

இதுமட்டுமின்றி, அப்படத்தில் வரும் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளும் ஓர் காரணமாக உள்ளது. இதுபோன்ற அளவுகடந்த ஆர்வத்தின் காரணமாக வாகன பிரியர்கள், அப்படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை மட்டும் டவுண்லோடு செய்து அதில் வரும் காரின் ஸ்டண்ட் சீனை புகைப்படமாக எடுத்து செல்போனின் வால் பேப்பராக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அந்தளவிற்கு இந்த படத்தில் கார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த படத்தில் பெரும்பாலான சண்டைக் காட்சிகள் கார்களை மையமாக வைத்து இடம்பெறுவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதிலும், ஹீரோ மற்றும் வில்லன் தரப்பு நபர்கள் பயன்படுத்தும் கார்கள் ஆச்சரியப்படுத்துகின்ற வகையிலான திறன்மிக்க கார்களாக இருக்கின்றது.

அந்தவகையில், விரைவில் வெளிவரவிருக்கும் நோ டைம் டு டை என்ற ஜேம்ஸ்பாண்டின் புதிய படத்தில் பங்களிக்க இருக்கும் காரை பற்றிய தகவல்தான் தற்போது கசிந்துள்ளது.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரைப் பற்றிய தகவல்தான் அது... குறிப்பாக இந்த கார் கடுமையான ஸ்டண்ட்டுகளில் ஈடுபடுவதைப் போன்ற காட்சிகள்தான் இப்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.

இந்த வீடியோவில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் உச்சபட்ச வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்வதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அது, லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் அறிமுகத்திற்காக எடுக்கப்படும் விளம்பர வீடியோவைப் போன்று ஆரம்பத்தில் தோன்றுகின்றது.

ஆனால், அதன் பின்னணியில் ஒலிக்கும் பின்னிசை மற்றும் தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும், ஜேம்ஸ் படத்திற்கான காட்சியைக் கொண்டதாக இருக்கின்றது.
தொடர்ந்து, இதை உறுதி செய்யும் வகையில் வீடியோவின் இறுதியில் கார் மற்றும் நோ டைம் டு டை படத்திற்கு விளம்பரம் அளிக்கின்ற வகையிலான எழுத்துக்கள் தோன்றுகின்றன.
அதேசமயம், இந்த காட்சியானது அப்படத்தில் வரும் சேஸிங் சீனிற்காக எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. இதனை அப்படத்திற்கான ஸ்டண்ட் மாஸ்டர் லீ மோரிசன் எடுத்து வருகின்றார். இவர் ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பார்ப்போரை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் இந்த ஸ்டண்ட் சீனை ஃபார்முலா 3 டபிள்யூ செரீஸ் பங்கேற்ற ஜெஸிகா ஹாவ்கின்ஸ் என்பவரை வைத்து எடுத்திருப்பதாக ஸ்டண்ட் மாஸ்டர் லீ மோரிசன் தெரிவித்துள்ளார். இதுபோன்று திரைப்படத்திற்காக அவர் காரை இயக்குவதே முதல் முறையாகும்.

உலகளவில் ரசிகர்களைக் கொண்ட படத்தில் தான் ஸ்டண்ட் செய்திருப்பது பெருமிதமாக இருப்பதாக ஜெஸிகா ஹாவ்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் கடந்த ஆண்டு இந்தியாவில் பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது, விரைவில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் வெளியாகியது.

இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு ஆரம்பவிலையாக ரூ. 70 லட்சம் வரை நிர்ணயிக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.


Click it and Unblock the Notifications