மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

பொலிரோ ஃபேஸ்லிஃப்ட், புதிய ஸ்கார்பியோ, தார் மற்றும் எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களை தொடர்ந்து அல்டுராஸ் ஜி4 மாடலின் பிஎஸ்6 வெர்சனின் தயாரிப்பு பணியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அல்டுராஸ் ஜி4 மாடலின் லேட்டஸ்ட் டீசர் புகைப்படம் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தெரிய வந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

தற்போதைய மஹிந்திரா அல்டுராஸ் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 181 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இதே என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் புதிய அல்டுராஸ் மாடலில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

அல்டுராஸ் ஜி4 காரின் சர்வதேச வெர்சனான ஷ்ஷாங்யாங்க் ரெக்ஸ்டான் மாடலும் இதே என்ஜின் அமைப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் அதன் என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இதேபோன்று இதன் இந்திய பிஎஸ்6 என்ஜின் ட்யூன் செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

விரைவில் அறிமுகமாகவுள்ள இதன் பிஎஸ்6 மாடலின் சமீபத்திய சோதனை ஓட்டங்களில் இந்த கார் வித்தியாசமான ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்களை கொண்டிருந்ததை நாம் பார்த்திருந்தோம். முன்புறத்தில் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை அறிய முடியவில்லை.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

இருப்பினும் இதன் சர்வதேச ரெக்ஸ்டான் மாடலில் இருந்து பெரிய அளவிலான க்ரில் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் பம்பர் உள்ளிட்டவற்றை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேபின் டிசைன், லேஅவுட் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளின் லிஸ்ட் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பவர்டு ட்ரைவர் இருக்கை, ட்யூல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், க்ரூஸ் கண்ட்ரோல், கலர்டு மல்டி-இன்ஃபோ திரை மற்றும் வெண்டிலேட்டட் இருக்கைகள் போன்றவை இதன் உட்புறத்தில் உள்ள அம்சங்களாகும்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

பாதுகாப்பு வசதிகளாக 9 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், முன்புறம் மற்றும் பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்ஸ், 360 டிகிரி கேமிரா, எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் மலைத்தொடர்களில் கண்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் புதிய டீசர் வெளியீடு...!

ப்ரீமியம் டீசல் எஸ்யூவி மாடலாக உள்ள மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் தற்போதைய விலையாக எக்ஸ்ஷோரூமில் ரூ.27.7 - ரூ.30.7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விட இதன் பிஎஸ்6 வெர்சன் சற்று ப்ரீமியமாக விலையை பெறவுள்ளது. அல்டுராஸிற்கு போட்டியாக ஃபோர்டு எண்டேவர், இசுஸு எம்யூ-எக்ஸ் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra’s Upcoming Alturas G4 BS6 Teased Ahead Of Debut
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X