அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவின் சூப்பர் ஹிட் எஸ்யூவி மாடல்களின் வரிசையில் அதிரடியாக இணைந்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 17 நாட்களில் அசரடிக்கும் புக்கிங் எண்ணிக்கையை பெற்றுள்ளது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மஹிந்திரா தார் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பங்களில் முற்றிலும் புதிய மாடலாக மஹிந்திரா தார் உருவாக்கப்பட்டது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

பழைய மாடலைவிட பரிமாணத்தில் பெரிய கார் மாடலாக மாறியதோடு, செம ஸ்டைலாகவும், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்தது. ஆஃப்ரோடு மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2ந் தேதி புதிய தலைமுறை தார் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அன்றே முன்பதிவு துவங்கியது. முதல் 5 நாட்களில் 6,000 முன்பதிவுகளை அள்ளிய நிலையில், தற்போது 17 நாட்களில் 15,000 முன்பதிவுகளை புதிய தார் எஸ்யூவி குவித்துள்ளதாக மஹிந்திரா தெரிவிததுள்ளது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களில் 57 சதவீதம் பேர், முதல்முறையாக கார் வாங்குபவர்கள் என்ற சுவாரஸ்யத் தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது, இதுவரை ஆஃப்ரோடு பிரியர்களை மட்டுமே கவர்ந்து வந்த தார் எஸ்யூவி இப்போது லைஃப் ஸ்டைல் எஸ்யூவியை விரும்பும் வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது தெரிகிறது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

மேலும், இதுவரை 8 லட்சம் பார்வையாளர்கள் மஹிந்திரா தார் எஸ்யூவி இணையதளத்தை பார்வையிட்டுள்ளதுடன், 65,000 பேர் வாங்குவதற்காக விசாரணை செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு முன்பதிவு தொடர்ந்து சிறப்பான முன்பதிவு கிடைக்கும் என்பதையும் நாம் யூகிக்க முடிகிறது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியானது ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கிறது. இதில், ஏஎக்ஸ் வரிசை மாடலானது ஆஃப்ரோடு பிரியர்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. எல்எக்ஸ் மாடலானது அதிக சொகுசு அம்சங்களுடன் ஆஃப்ரோடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான பல கூடுதல் சொகுசு வசதிகளை பெற்றிருக்கிறது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும்,, 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் வாகனம் செல்லும்போதே, 2 வீல் டிரைவ் சிஸ்டத்திலிருந்து 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை எளிதாக மாற்றுவதற்கான ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

முன்புறத்தில் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மல்டி லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளது. இதுதவிர்த்து, சக்கரங்கள் சேறு, சகதியில் சிக்கி சுற்றுவதை தவிர்ப்பதற்கான எஞ்சின் பவரை நிறுத்துவதற்கான மெக்கானிக்கல் டிஃபரன்ஷியல் சிஸ்டம், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, தரையில் பிடிப்பு இல்லாத சக்கரங்கள் வெறுமனே சுழல்வதை தவிர்க்கும் பிரேக் லாக்கிங் டிஃபரன்ஷியல் சிஸ்டம் ஆகியவையும் இந்த எஸ்யூவியில் உள்ளது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

மேலும், வேகமாக செல்லும்போது 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே இயங்க அனுமதிக்கும் தொழில்நுட்ப வசதியும் உள்ளது. இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறந்த செயல்திறனை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியானது 650 மிமீ ஆழம் வரை நீர் நிலைகளை எளிதாக கடக்கும் தொழில்நுட்ப வசதியையும் பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி 226 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்.

மேலும், நீண்ட தூர பயணங்கள் மற்றும் இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மியூசிக் சிஸ்டம், சிறப்பான ஏசி சிஸ்டம், டயர்கள் என அசத்தலாக வந்துள்ளது புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி. ரூ. 9.80 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் கிடைக்கிறது. புக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருவதால், காத்திருப்பு காலமும் வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has announced that the new-gen Thar SUV received 15,000 bookings since its launch in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X