சான்ஸே இல்ல!! 2021 எக்ஸ்யூவி500 காரில் தனது முழு திறமையையும் இறக்கியுள்ள மஹிந்திரா!
2021ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் மற்றும் வெளிபுறத்தை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா & மஹிந்திரா வருகிற 2021ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் முக்கியமானவைகளாக 2021 எக்ஸ்யூவி500 மற்றும் புதிய ஸ்கார்பியோ கார்கள் அடங்குகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பல வருடங்களாக அப்கிரேட் எதையும் பெறாமல் விற்பனையில் உள்ளது. இதனால் இதற்கு புதிய தலைமுறை அப்கிரேட்-ஐ விரைவில் வழங்கவுள்ள மஹிந்திரா நிறுவனம் இந்த காரை புதிய மோனோகோக் சேசிஸின் அடிப்படையில் வடிவமைத்துள்ளது.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்தியாவின் பல்வேறுப்பட்ட சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த 2021 மாடல் 7-இருக்கை வெர்சனாக கொண்டுவரப்படவுள்ளதை அதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிந்திருந்தது.

சமீபத்தில் வெளியாகி இருந்த ஸ்பை படங்கள் கூர்மையான ஹெட்லேம்ப் யூனிட், ரீடிசைனில் செங்குத்தாக 6-துண்டு க்ரில், மிகவும் பருத்த வடிவில் பொனெட், புதிய மூடுபனி விளக்குகளுடன் ரீ-ஸ்டைலில் முன்பக்க பம்பர், அகலமான காற்று ஏற்பான், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், பெரிய பில்லர்கள் உடன் க்ரீன்ஹௌஸ் மற்றும் பின்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட வடிவில் டெயில்லேம்ப் உள்ளிட்டவை புதிய எக்ஸ்யூவி500 காரில் வழங்கப்பட்டிருப்பதை பார்த்திருந்தோம்.
இந்த நிலையில் தற்போது இவற்றை உறுதி செய்யும் வகையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் தொடர்பான வீடியோ ராயல் ரைடர் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் காரின் உட்புற கேபினையும் பார்க்க முடிகிறது.

இதன்படி புதிய டேஸ்போர்டு, மைய கன்சோல் மற்றும் ஏசி காற்று வெளிவரும் துளைகளுடன் கேபின் மிகவும் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் இரண்டாவது இருக்கை வரிசை, பின்பக்க பொருட்களை வைக்கும் இடம் மற்றும் பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் வெளிக்காட்டுகிறது.

2021 எக்ஸ்யூவி500-இன் உட்புறத்தில் பொத்தான்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக இயற்பியல் முறையில் தொடும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. டேஸ்போர்டு மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் இது உயர்தரத்திலான பாகங்களால் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும்.

எங்களை கவர்ந்தது என்று பார்த்தால், 10 இன்ச்சிற்கும் அதிகமான நீளத்தில் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என உள்ள இரு திரைகள் ஆகும். இந்த 2021ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா தயாரிப்பின் டாப் வேரியண்ட்களில் ரேடார் சார்ந்த பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் பெட்ரோல் என்ற இரு என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டின் உடனும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








