மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

ஹைப்ரீட் என்ஜினிற்காகவா என்கிற சந்தேகத்தை கிளப்பும் விதத்தில் அளவீட்டு கருவிகளுடன் புதிய மாருதி பலேனோ கார் ஒன்று சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

புதிய மாசு உமிழ்வு விதிகளினால் வாகனங்களில் இருந்து வெளிவரும் காற்று மாசுவை குறைக்க தயாரிப்பு நிறுவனங்கள் வெவ்வேறான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. அதில் ஹைப்ரீட் என்ஜின் தேர்வும் ஒன்று.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி முழு-எலக்ட்ரிக் கார்களை கொண்டுவருவதில் உள்ள சில தடைகளினாலும் அதன் தயாரிப்புகளில் ஹைப்ரீட் அல்லது சிஎன்ஜி என்ஜின் தேர்வுகளை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

இந்த வகையில் மாருதியின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவில் டர்போசார்ஜ்டு என்ஜின் கொண்டுவரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது பலேனோ கார் ஒன்று மாசு உமிழ்வை அளவிடும் கருவிகளுடன் சோதிக்கப்பட்டுள்ளது.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

ஷிஃப்ட்டிங் கியர்ஸ் என்ற இணையத்தள பக்கத்தின் மூலமாக கிடைத்துள்ள இதுகுறித்த ஸ்பை படங்களில் காரின் அனைத்து சக்கரங்களிலும் ஸ்ட்ரெய்ன் கேஜ் எந்திரம் இணைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

இந்த வகையில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் பலேனோ மைல்ட்-ஹைப்ரீட் காரில் வழக்கமான என்ஜின் உடன் பின் சக்கரஙகளுக்கு அருகே இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்படவுள்ளன. வழக்கமாக பலேனோ முன் சக்கரங்களின் மூலம் இயங்கும் காராகும்.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

அது அப்படியே பலேனோ மைல்ட்-ஹைப்ரீட் காருக்கும் தொடரப்படுவதற்கே வாய்ப்புள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார்களில் வழங்கப்படும் பேட்டரியானது இயக்கத்தின்போது பெட்ரோல் என்ஜின் மூலமாக சார்ஜ் செய்யப்படும். இத்தகைய இரு எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பினால் காரின் எரிபொருள் திறனும் மேம்பட வாய்ப்புள்ளது.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

பொதுவாக ஹைப்ரீட் கார்கள் எரிபொருள் இல்லாத சமயத்தில் வெறும் எலக்ட்ரிக் மோட்டாரின் ஆற்றலின் மூலமாக குறிப்பிட்ட தூரத்திற்கு இயங்கும் வகையில் வழங்கப்படுகின்றன. அந்த குறிப்பிட்ட தூரம், மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரியை பொறுத்தது.

மாருதி பலேனோவில் ஹைப்ரீட் என்ஜினா? சந்தேகத்தை கிளப்பிய சோதனை ஓட்டம்!!

அதேநேரம் 2021 மாருதி பலேனோ ஹைப்ரீட் காரில் எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு பதிலாக ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர், 48 வோல்ட் பேட்டரி உடன் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. எத்தகைய மைல்ட்-ஹைப்ரீட் அமைப்பு பலேனோவில் வழங்கப்படவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
New Maruti Baleno Variant Spied Testing By ARAI – Is It Hybrid
Story first published: Tuesday, December 29, 2020, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X