மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் அறிமுகமாகிறது?
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் கார் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. இதனால், விற்பனையிலும் அசத்தி வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் முதன்மையான இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில், டிசையர் காரின் மார்க்கெட்டை தக்க வைக்கும் விதத்தில், சில கூடுதல் அம்ங்களை சேர்த்து பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளில் கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, மாருதி டிசையர் காரின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.

மாருதி டிசையர் காரில் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடரும்.

அதேநேரத்தில், இதுவரை டிசையர் காரில் சிறந்த தேர்வாக இருந்து வந்த 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் தேர்வு விற்பனையில் இருந்து விலக்கப்பட இருக்கிறது. எனவே, இனி பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே மாருதி டிசையர் கார் கிடைக்கும் என நம்பலாம்.

பிஎஸ்-6 எஞ்சின்கள் தவிர்த்து மாருதி டிசையர் காரில் சிறிய அளவிலான வடிவமைப்பு மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. முன்புறத்தில் ஹெட்லைட், க்ரில் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருப்பதாக தெரிகிறது.

மேலும், விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்படும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் நடுத்தர வகை வேரியண்ட்டுகளிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இந்த மாடலில் நேவிகேஷன், வாய்ஸ் ரெககனிஷன் வசதி, வாகனம் குறித்த எச்சரிக்கை நுட்பங்களும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது. இதனால், நடுத்தர வகை வேரியண்ட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.
Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications