4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

விரைவில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றி இதுவரை வெளிவராத சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் காண்போம்.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

கசிந்துள்ள இந்த தகவல்களின்படி, புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 4 வேரியண்ட்களிலும் 9 விதமான நிறத்தேர்வுகளிலும் விற்பனையாகவுள்ளது. மேலும் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மாடல் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களையும் பெற்றுள்ளது என அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

இந்த தகவல்கள் மூலமாக மட்டுமில்லாமல் இந்த 2020 இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்தது. அப்போது வெளியாகியிருந்த அந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் யூ வடிவத்தில் க்ரோம் பொருத்தப்பட்ட புதிய க்ரில் மற்றும் ரீ-டிசைனில் முன்புற பம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

இவற்றுடன் முன்புறத்தில் இந்த 2020 மாடல் மாற்றியமைக்கப்பட்ட வடிவில் ஃபாக் லேம்ப் பொருத்தப்படும் குழி மற்றும் ஃபாக்ஸ் ஸ்கஃப் ப்ளேட்டையும் கொண்டுள்ளது. பின்புறத்தில் ரீ-டிசைனில் எல்இடி டெயில் லேம்ப்ஸ் மற்றும் பம்பரை பெற்றுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு கூடுதலான எண்ணிக்கையில் ஸ்கஃப் தட்டுகளும் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

15 இன்ச் அலாய் சக்கரங்கள் அப்படியே தொடர்ந்துள்ளன. அதேபோல் ரூஃப் ரெயிலின் டிசைனும் தற்போதைய இக்னிஸ் மாடலில் இருந்து எந்த மாற்றத்தையும் பெறவில்லை. உட்புறத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் புதிய கேபினை பெற்றுவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

ட்யூல்-டோன் டேஸ்போர்டுடன் விற்பனை செய்யப்படவுள்ள இந்த கார் உள்ளே அதிகளவில் தகவல்களை கொண்ட சென்ட்ரல் திரை, ஸ்மார்ட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆடியோ மற்றும் ஐஆர்விஎம்களின் கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

பாதுகாப்பு அம்சங்களாக இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இரட்டை முன்புற காற்றுப்பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், கார் திருடுப்போவதை தடுக்க அலாரம், சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி, அதிவேகத்தை எச்சரிக்கும் அமைப்பு, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கார் இயங்குவதை கணித்து ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகும் கதவுகள் உள்ளிட்டவை உள்ளன.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

இந்த புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பிஎஸ்6 தரத்தில் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் தேர்வாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் (ஆரம்ப விலை வேரியண்ட்டான சிக்மா ட்ரிம்மை தவிர்த்து) வழங்கப்படவுள்ளதாக தற்போது கசிந்துள்ள தகவல் கூறுகிறது.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

மாருதி இக்னிஸ் மாடலின் தற்போதைய தலைமுறை கார் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.4.47 லட்சத்தில் இருந்து ரூ.7.10 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை பிஎஸ்6 அப்டேட்டால் ரூ.12,000லிருந்து ரூ.16,000 வரை அதிகரிக்கப்படலாம்.

4 ட்ரிம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...!

வழக்கம்போல் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்துள்ள தகவல்கள் புதிய காரை பற்றி கிட்டத்தட்ட அனைத்து விபரங்களையும் கூறிவிட்டன. இது கசிந்துள்ள தகவல் தான் என்பதால் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலில் சில மாறுதல் இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

Source: Auto Punditz

Article Published On: Saturday, January 25, 2020, 13:00 [IST]
English summary
Maruti Suzuki Ignis Facelift Brochure Revealed: Will Arrive In Four Trims, Nine Colours
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+