புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த புதிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, பிஎஸ்6 கார்களை அறிமுகப்படுத்துவதில் அனைத்து கார் நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே பெரும்பாலான கார் மாடல்களில் பிஎஸ்6 எஞ்சினுடன் கொண்டு வந்துவிட்டது.

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

ஆனால், அந்நிறுவனத்தின் எஸ் க்ராஸ் காரின் பிஎஸ்6 மாடல் இன்னும் சந்தைக்கு கொண்டு வரப்படவில்லை. கொரோனா பாதிப்பால், இந்த காரின் அறிமுகம் தள்ளிப்போய் வருகிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

இந்த நிலையில், மீண்டும் டீலர்களை திறந்துள்ள மாருதி சுஸுகி தற்போது எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடலை விரைவில் கொண்டு வருவதற்கான ஆயத்தப் பணிகள் இறங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

வரும் ஜூன் மாத துவக்கத்தில் புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஸிக் வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சில மாருதி டீலர்களில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

2020 மாடலாக வரும் புதிய மாருதி எஸ் க்ராஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சிக்மா என்ற விலை குறைவான பேஸ் வேரியண்ட் விற்பனையில் இருந்து விலக்கப்படும்.

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் ரூ.9.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. எஞ்சினை தவிர்த்து பெரிய அளவிலான மாறுதல்கள் இருக்காது.

புதிய எஸ் க்ராஸ் கார் எப்போது அறிமுகமாகிறது... மாருதி பிரியர்களுக்கு மகிழ்வு தரும் செய்தி!

மாருதி நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு செல்லும். நிஸான் கிக்ஸ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களுடன் விலை அடிப்படையில் போட்டி போடும். இது க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki has restarted both production and dealership operations in the Indian market, post the lockdown relaxations by the government. The company is now getting back into the business and is all set to introduce the BS6-compliant S-Cross in India.
Story first published: Thursday, May 21, 2020, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X