தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ப்ரீமியம் வெர்சன் காராக அறிமுகமாகவுள்ள எக்ஸ்எல்5 மாடல் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அபினவ் பட் என்பவர் யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்பை வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் ப்ரீமியம் வெர்சனாக மாருதி நிறுவனம் எக்ஸ்எல்5 காரை அதன் நெக்ஸா அவுட்லெட்களின் மூலமாக சந்தையில் விற்பனை செய்யவுள்ளது. இதன் பெயர் எக்ஸ்எல்5 என்பது இப்போது வரையில் வதந்தியாகவே உள்ளது.

தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

இந்த நிலையில் வேகன்ஆரின் இந்த ப்ரீமியம் வெர்சன் தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது டெல்லி-என்சிஆர் சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த கார் வழக்கம்போல் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

வேகன்ஆர் வழியில் வேகன்ஆர் குடும்பத்தில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் நிலைநிறுத்தப்பட்டாலும், சிறப்பான ஸ்டைலிங் பாகங்களையும், உட்புற கேபினில் அதிகளவில் வசதிகளையும் கொண்டிருக்கும். இந்த சோதனை கார் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தாலும் வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சில மாற்றங்கள் தெரியவந்துள்ளன.

தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

குறிப்பாக அலாய் சக்கரங்கள் மாருதி சுசுகி இக்னிஸ் மாடலில் இருப்பதை போன்று உள்ளது. அதேபோல் க்ரில் அமைப்பானது எக்ஸ்எல்6 மாடலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். புதிய டிசைனில் எல்இடி தரத்தில் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய ரன்னிங் விளக்குகள், மறுவேலை செய்யப்பட்ட பம்பர் உள்ளிட்டவற்றையும் இந்த ஹேட்ச்பேக் காரில் எதிர்பார்க்கலாம்.

தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

ஆனால் மொத்த தோற்ற அளவில் கார் வழக்கமான வேகன்ஆர் மாடலை தான் ஒத்து காணப்படுகிறது. இருப்பினும் காரின் பக்கவாட்டு பகுதி சில மாற்றங்களை ஏற்றிருக்கும். பின்புறத்தில் செங்குத்தான ஸ்டாக்டு டெயில்லைட்கள் அப்படியே வழங்கப்பட்டிருந்தாலும், பூட்-லிட்டில் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் வித்தயாசமான கார்னிஷ் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

மாருதி சுசுகி நிறுவனம் புதிய எக்ஸ்எல்5 ஹேட்ச்பேக் காரில் ப்ரீமியம் தரத்திற்காக 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 77 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

இந்த புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரில் சிறப்பம்சங்களாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை உள்ளிட்டவற்றுடன் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோலும் வழங்கப்படவுள்ளன.

தொடர் சோதனை ஓட்டங்களில் மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மாருதி சுசுகி எக்ஸ்எல்5 ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுகம் குறித்த தகவல் வெளிவருவதில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. எப்படியிருந்தாலும் அடுத்த வருடத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த காருடன் வேகன்ஆர் இவி மாடலின் தயாரிப்பு பணியிலும் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
New Maruti Suzuki XL5 Test Mule Spotted In Delhi-NCR
Story first published: Monday, July 20, 2020, 0:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X