ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டில் பவர்ஃபுல் சூப்பர் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

இதுவரை விற்பனையில் இருந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுடன் இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வந்துள்ளது. பழைய மாடலுக்கும், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இல்லை. ஆனால், புதிய பம்பர் அமைப்பு, க்ரில் அமைப்பு ஆகியவற்றில் சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

புதிய ஏஎம்ஜி ஜிடிஆர் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், கார்பன் ஃபைபர் விங் அமைப்பு, புதிய புகைப்போக்கி அமைப்பு ஆகியவையும் குறிப்பிடத்தக்க விஷயங்களாக இருக்கின்றன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

இந்த காரில் பை-டர்போ 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 577 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடிஆர் கார் பழைய மாடலைவிட 13.9 கிலோ எடை குறைந்துள்ளது. இதனால், முந்தைய மாடலைவிட செயல்திறனில் மேம்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 318 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

இந்த காரில் ரியர் வீல் ஸ்டீயரிங் சிஸ்டத்துடன் வந்துள்ளது. அதாவது, கார் 100 கிமீ வேகத்தை தாண்டும்போது, அதிக நிலைத்தன்மையை வழங்கும் விதத்தில் இந்த காரின் பின்சக்கரங்களும் திரும்பும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. வேகத்தை பொறுத்து முன்சக்கரங்களுக்கு இணையான திசையில் அல்லது எதிர் திசையில் பின்சக்கரங்கள் திரும்பும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது.

ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருப்பதுடன், 12.3 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ரூ.2.48 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடிஆர் கார் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காருக்கு ரூ.2.48 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 27, 2020, 18:28 [IST]
English summary
Mercedes Benz has launched AMG GT R performance car in India priced at Rs.2.48 Crore (Ex-Showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+