மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் மிக வலுவான வர்த்தகத்தை பதிவு செய்வதற்கு இலக்கு வைத்துள்ளது. இதற்காக, பல்வேறு ரகங்களில் புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சிறப்பான மாடலாக நான்காம் தலைமுறை ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி காரை இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது முந்தைய மாடலைவிட 80 மிமீ அதிக வீல் பேஸ் நீளம் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எலைட் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும், ஹிப் ஹாப் எடிசன் என்ற ஸ்பெஷல் எடிசன் மாடலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

இந்த மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் என இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

இந்த காரின் ஜிஎல்இ 400டீ (ஹிப் ஹாப்) என்ற டீசல் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் எஞ்சின் 330 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

இந்த காரின் 300டீ என்ற மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 245 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 20 அங்குல அலாய் வீல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டில் முக்கிய அம்சமாக இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எம்பியூஎக்ஸ் என்ற கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

இந்த காரில் பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. மேலும், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ஏர் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட பின் இருக்கைகள் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

தவிரவும், 360 டிகிரி கேமரா கண்காணிப்பு, 9 ஏர்பேக்குகள், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், அவசர காலத்திற்கான பிரேக் அசிஸ்ட் என பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலும் நீள்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் ரூ. 73.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டான ஹிப் ஹாப் எடிசன் ரூ.1.25 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் இந்தியாவில் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, போர்ஷே மசான், ஜாகுவார் எஃப் பேஸ், வால்வோ எக்ஸ்சி60 ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
German luxury car maker, Mercedes Benz has launched new GLE LBW SUV in India at Rs.73.70 Lakh (Ex-Showroom,India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X