2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், புதிய ஜிஎல்ஏ மாடலை டெல்லிக்கு அருகே நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு காண்பித்துள்ளது. இந்த புதிய பென்ஸ் கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

ஜெர்மனி தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியாவில் தற்போது காட்சிப்படுத்தியுள்ள ஜிஎல்ஏ மாடலில் புதிய டிசைன் மொழியையும், அதிகளவிலான உட்புற அம்சங்களையும் வழங்கியுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

இந்நிறுவனத்தில் இருந்து இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான மற்றொரு மாடலான ஏ-கிளாஸ் லிமோசின் தயாரிக்கப்பட்ட எம்எஃப்ஏ ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்த புதிய காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காரின் வெளிப்புறம் புதிய டிசைன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

மொத்த பரிமாண அளவுகளை பொறுத்து வரையில், மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஜிஎல்ஏ மாடல் இதன் முந்தைய தலைமுறை காரை விட நீளமாகவும், அகலமாகவும் உள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

உட்புறத்தில் இந்த சொகுசு கார், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஃபைட்டர்-ஜெட் ஸ்டைலில் ஏசி கற்றைகள், புதிய டச்பேட் மற்றும் வண்ண நிறங்களில் எச்யூடி உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

வெளிநாட்டு சந்தைகளில் ஜிஎல்ஏ மாடல் ஜிஎல்ஏ 200 மற்றும் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஜிஎல்ஏ 200 வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

மற்றொரு ஜிஎல்ஏ 35 வேரியண்ட், 306 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 4-சிலிண்டர் அமைப்பை கொண்ட 2.0 லிட்டர் எரிவாயு என்ஜினை கொண்டுள்ளது. இதன் இந்திய மாடலில் 2.0 லிட்டரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை எதிர்பார்க்கலாம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

மேலும் இந்த புதிய மாடலுக்கு ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் தேர்வும் விரைவில் கொடுக்கப்படவுள்ளது. தற்சமயம் இந்த கார் வாடிக்கையாளர்கள் பார்வைக்காக மட்டுமே ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை மாடலின் இந்திய அறிமுகம் இந்த வருட அக்டோபர் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

மற்றப்படி இதன் இந்திய சந்தைக்கான விலை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. இந்த புதிய ஜிஎல்ஏ கார் உருவாக்கப்பட்ட ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் லிமோசினின் விலை ரூ.40 லட்சம் அளவில் இந்தியாவில் நிர்ணயிக்கப்படவுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிஎல்ஏ மாடலை வெளியிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ்.. இந்திய அறிமுகம் எப்போது..?

இதனால் புதிய ஜிஎல்ஏ மாடலையும் குறைவான விலையில் எதிர்பார்க்கலாம். மெர்சிடிஸ் ஜிஎல்ஏ மாடல் வெளிநாட்டு சந்தைகளில் ரூ.33 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz GLA Unveiled At Auto Expo
Story first published: Thursday, February 6, 2020, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X