முரட்டுத்தனமான டிசைனில் ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவி... டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய எஸ்யூவி கன்செப்ட் வெர்சனின் டீசர் ஸ்கெட்ச்சை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விஷன் இன் என அழைக்கப்படும் ஸ்கோடாவின் இந்த புதிய எஸ்யூவி மாடல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் மூலம் இந்த எஸ்யூவி காரின் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்களில் ஸ்கோடா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி இருப்பது தெரிய வருகிறது. கடுமையான போட்டியினை தரக்கூடிய மாடல்கள் உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் களம் காணவுள்ள இந்த எஸ்யூவி கார், விற்பனையில் நேரடியாக கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடவுள்ளது.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

மேலும் இந்த ஸ்கெட்ச் புகைப்படங்கள், ஸ்கோடாவின் இந்த எஸ்யூவி கார் முரட்டுத்தனமான தோற்றத்தை பெரிய முன்புற க்ரில் மற்றும் முற்றிலும் வித்தியாசமான முன்புற பம்பருடன் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றன. இதுமட்டுமில்லாமல் இந்த எஸ்யூவி காரின் உயரம் அதிகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் வெளியாகியுள்ள இந்த ஸ்கெட்ச் புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

இதனால் ஓட்டுனரின் இருக்கை அளவில் பெரியதாக கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோல் வெளிப்புறத்தையும் பெரிய ஜன்னல்கள் வழியாக பார்க்க முடியும். ஸ்கோடாவின் இந்த புதிய எஸ்யூவி காரின் முன்புறத்தில் இந்நிறுவனத்திற்கே உரிய தோற்றத்தில் பெரிய க்ரில், ட்யூல்-ஹெட்லைட்ஸ், பெரிய ஏர் இண்டேக்ஸ் மற்றும் ஸ்கஃப் தட்டுகளை உடைய பம்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் இந்த கார் ஸ்போர்ட்டியான பெயிண்ட் அமைப்பையும் டிசைன் அமைப்பையும் பெற்றுள்ளது. பக்கவாட்டில் கூர்மையான டிசைன்கள் காரின் நீளத்திற்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கக்கூடிய, நேர்த்தியான எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் ரூஃப்-ல் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் போன்றவற்றை இந்த கார் பெற்றுள்ளது.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

ஸ்கோடாவின் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதே கட்டமைப்பில் தான் ஸ்கோடா நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு மாடலான காமிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

இந்த புதிய காரின் உட்புறத்திலும் ஸ்போர்ட்டியான தீம் வழங்கப்பட்டுள்ளதை வெளியாகியுள்ள டீசர் ஸ்கெட்ச் போட்டோக்கள் காட்டுகின்றன. காரின் உட்புறத்தில் மைய கன்சோலில் சுழலக்கூடிய தொடுத்திரை, மிகவும் தாழ்வாக பொருத்தப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் உள்பட நிறைய தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

ஸ்கோடா நிறுவனம் இந்த புதிய எஸ்யூவி காரில் மூன்று சிலிண்டர் அமைப்பை கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

இந்த புதிய எஸ்யூவி கார் அடுத்த மாதத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதன் தயாரிப்பு பணிகள் சில மாதங்கள் கழித்தே துவங்கப்படும் என தெரிகிறது. இதனால் இந்த கார் 2021ஆம் ஆண்டில் தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

புதிய ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் டீசர் ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியீடு...

ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு தனது டீசல் மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவும் இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் இந்த விஷன் இன் எஸ்யூவி மாடலுடன் 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்ற காமிக் எஸ்யூவி மாடலும் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2020, 14:46 [IST]
English summary
New Skoda Vision IN Concept SUV Teaser Sketches Released: Unveil Scheduled For 2020 Auto Expo
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+