கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

வரப்போகும் கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடாவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் வீடியோவில் "உங்களது சாண்டா அல்ட்ராஸ்"- "விரைவில் வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அல்ட்ராஸின் புதிய மாடல் வெளியாகவுள்ளது என்பதை டாடா கூறுகிறது என்பதை அறிய முடிகிறது. ஆனால் அது டர்போசார்ஜ்டு பெட்ரோல் வேரியண்ட்டா அல்லது எதாவது ஸ்பெஷல் எடிசனா என்பது தெரியவில்லை.

கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டர்போ பெட்ரோல் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

அதிகப்பட்சமாக 110 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த அல்ட்ராஸ் டர்போ காரில் புதிய 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனையும் டாடா நிறுவனம் வழங்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

லுமேக்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த கியர் ஷிஃப்டர் வாங்கப்படலாம் என்றும், இதன் நுணுக்கமான பாகங்கள் ஜெர்மனை சேர்ந்த ஸ்கேஃப்லர் நிறுவனத்தில் இருந்து பெறப்படலாம் என்றும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

மற்ற ஏஎம்டி யூனிட்களை காட்டிலும் அதிநவீன தரத்திலும் மலிவானதாகவும் வழக்கமான டிசிடி மற்றும் டார்க் கன்வெர்டர் ட்ரான்ஸ்மிஷன்களை விடவும் மலிவானதாகவும் இருக்கும் என்று கூறப்படும் இந்த டிசிடி கியர்பாக்ஸ் எதிர்காலத்தில் மற்ற கார் மாடல்களுக்கும் வழங்கப்படலாம்.

கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

தற்சமயம் டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

கிறித்துமஸில் புதிய அல்ட்ராஸ் கார் வெளிவருகிறது!! டீசர் வீடியோவின் மூலம் அறிவித்த டாடா மோட்டார்ஸ்

மற்றப்படி தோற்றத்தில் தற்போதைய அல்ட்ராஸைதான் புதிய டர்போ பெட்ரோல் மாடலும் ஒத்திருக்கும். பின்பக்கத்தில் ‘ஐடர்போ' முத்திரையை அல்ட்ராஸ் டர்போ கார் பெற்றிருக்கும். இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் தற்போதைய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.44 லட்சத்தில் இருந்து ரூ.8.95 லட்சம் வரையில் உள்ளது.

Most Read Articles

English summary
Tata teases new Altroz. Special edition or Turbo version?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X