Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்ஜி ஹெக்டருடன் மல்லுக்கட்ட தயாராகும் 2021 டாடா ஹெரியர்!! புதிய பெட்ரோல் என்ஜின் விரைவில் அறிமுகம்
2021 டாடா ஹெரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் உள்ள நடுத்தர எஸ்யூவி கார்களான ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்டவை ஏற்கனவே பெட்ரோல் என்ஜின் தேர்வை கொண்டுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடுத்த வருடத்தில் பெட்ரோல் என்ஜின் தேர்வை பெறவுள்ளது.

இவற்றை தொடர்ந்து டாடா மோட்டார்ஸும் தனது எஸ்யூவி மாடலான ஹெரியரில் பெட்ரோல் என்ஜினை வழங்கவுள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் தற்போது இந்த டாடா கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இதுகுறித்த ஸ்பை படங்களில் 2021 ஹெரியர் பெட்ரோல் புனேக்கு அருகே முழு மறைப்புடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காரின் பின்பக்கத்தில் சோதனை கருவிகளை தெளிவாக பார்க்க முடிகிறது.

இந்தியாவில் பெட்ரோல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பலனை டாடா மோட்டார்ஸும் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மூலமாக அடைந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் 2020 நவம்பரில் 3,500 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 50 சதவீதத்தை அதன் பெட்ரோல் வேரியண்ட்களின் மூலம் எம்ஜி மோட்டார் பெற்றுள்ளது. இதிலிருந்து ஹெரியரின் விற்பனையில் டாடா எத்தகைய இழப்பை சந்திந்துள்ளது என்பதை அறியலாம்.

ஹெரியர் பெட்ரோல் மாடலை கொண்டுவருவதற்கு இதுமட்டும் காரணம் இல்லை. ஏனெனில் புதிய பெட்ரோல் வேரியண்ட்களின் வருகையினால் ஹெரியரின் ஆரம்ப விலையும் கணிசமாக குறைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ஹெரியரில் அடுத்த ஆண்டு 1.5 லிட்டர், நேரடி-இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் வழங்கவுள்ளது. நெக்ஸானின் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜினின் 4-சிலிண்டர் வெர்சனான இது 150 பிஎச்பி-க்கும் அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளது.

டாடா ஹெரியர் பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்தான் டாடாவின் புதிய அறிமுகமான கிராவிட்டாஸ் எஸ்யூவியிலும் வழங்கப்படவுள்ளது.

புதிய என்ஜின் தேர்வை தவிர்த்து தோற்றத்தில் 2021 ஹெரியர் பெட்ரோல் மாடல் பெரும்பான்மையாக தற்போதைய டீசலை மாடலை தான் ஒத்து காணப்படும். இருப்பினும் சில நேர்த்தியான முத்திரைகளுடன் புதிய நிறத்தேர்வுகளை எதிர்பார்க்கலாம்.