பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

2020 ஹெரியரின் புதிய தொலைக்காட்சி கமெர்ஷியல் (டிவிசி) வீடியோவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான டாடா நிறுவனம் ஹெரியரை கடந்த 2019ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டில் 2020 ஹெரியர் ஆற்றல்மிக்கதாக கொண்டுவரப்பட்டது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

ஆற்றல்மிக்கதாக மட்டுமின்றி புதியதாக ஆட்டோமேட்டிக் தேர்வுடன் அதிக வசதிகளையும் 2020 ஹெரியரில் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஹெரியரின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக கடந்த மாதத்தில் உயர்ந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

எந்த அளவிற்கு என்றால், 2019 ஆகஸ்ட் உடன் ஒப்பிடும்போது இதன் கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தின் 1,694 என்ற விற்பனை எண்ணிக்கை சுமார் 167 சதவீதம் அதிகமாகும். இவ்வளவு அதிகமான விற்பனை எண்ணிக்கையை ஹெரியர் கடந்த 15 மாதங்களில் பெற்றது கிடையாது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

தேவை அதிகரிப்பதை உணர்ந்த டாடா நிறுவனம் ஹெரியரின் புதிய எக்ஸ்டி+ வேரியண்ட்டை பனோராமிக் சன்ரூஃப் வசதி உடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.16.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

இவ்வளவு குறைவான விலையில் பனோராமிக் சன்ரூஃப் உடன் வேறெந்த எஸ்யூவி காரும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கை காலங்கள் வருவதால் இத்தகைய சிறப்பம்சங்களினால் ஹெரியரின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என டாடா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த சன்ரூஃப் உடன் ஹெரியரை விளம்பரப்படுத்தும் நோக்கில் தான் டாடா நிறுவனம் தற்போது புதிய டிவிசி வீடியோவை வெளியிட்டுள்ளது. ரூ.16.99 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ள எக்ஸ்டி+ வேரியண்ட்டை காட்டிலும் ரூ.66,000 அதிகமான விலையில் ஹெரியரின் எக்ஸ்இசட் வேரியண்ட் கிடைக்கிறது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

இந்த விலைகளில் ஹெரியரை இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு உள்ளாக கார் டெலிவிரி செய்யப்பட்டுவிடும் என டாடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஏனெனில் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து இந்த எக்ஸ்ஷோரூம் விலைகளை அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

ஹெரியரில் பனோராமிக் சன்ரூஃப் பிராண்டின் தானியங்கி வசதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது நிறுத்தும் இடத்தில் கார் நிறுத்தப்பட்டால் சன்ரூஃப் தானாக மூடிக்கொள்ளும். மேலும் மழை வருவதை உணர்ந்து தானாக மூடி கொள்ளும் வசதியையும் இந்த சன்ரூஃப் கொண்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் டாடா ஹெரியர் எக்ஸ்டி+... இம்மாதத்திற்குள் முன்பதிவு செய்வதுதான் நல்லது...

கருப்பு நிறத்தில் கண்ணாடியுடன் கொடுக்கப்படுவதால் இந்த சன்ரூஃப் கோடை காலத்தில் கேபினிற்குள் வெயிலின் தாக்கம் இல்லாமலும் பார்த்து கொள்ளும். இந்த பனோரோமிக் சன்ரூஃப் வசதியை தவிர்த்து வேறெந்த கூடுதல் வசதியும் புதிய எக்ஸ்டி+ வேரியண்ட்டில் கொண்டுவரப்படவில்லை.

Most Read Articles

English summary
New Tata Harrier TVC Highlights Panoramic Sunroof – Open Up To Life
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X