அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

இந்திய சந்தைக்காக புதிய காம்பெக்ட்-செடான் காரின் தயாரிப்பில் ஈடுப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. கோஷாக் என்ற பெயரில் இந்நிறுவனத்தில் இருந்து வெளியாகவுள்ள இந்த செடான் கார் முக்கியமாக மாருதி சுசுகி டிசைர் மற்றும் ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.

அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

கோஷாவ்க் என்ற பறவையின் தோற்றத்தின் அடிப்படையில் டாடா கோஷாக் உருவாக்கப்படவுள்ளது. இந்நிறுவனம் அதன் பெரும்பான்மையான பயணிகள் வாகனங்களுக்கு பறவையின் பெயரை தான் சூட்டி வருகிறது. இந்த வகையில் தான் ஹெரியர் மற்றும் அல்ட்ராஸ் மாடல்கள் பெயர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

இந்த புதிய செடான் கார் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், டாடா கோஷாக், சப்-4 மீட்டர் மாடலாக டாடாவின் ஆல்ஃபா கட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்படவுள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் மூலமாக சந்தையில் அறிமுகமான புதிய ஆல்ஃபா கட்டமைப்பில் தான் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள எச்பிஎக்ஸ் மைக்ரோ-எஸ்யூவியும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

லேட்டஸ்ட் டிசைன் மொழியில் இருந்து மேம்படுத்தப்பட்ட டிசைனில் தோற்றத்தை ஏற்கவுள்ள டாடாவின் இந்த செடான் கார், ஹார்ன்பில், சியாரா இவி கான்செப்ட் மற்றும் அல்ட்ராஸ் மாடல்களில் இருந்து டிசைன் பாகங்களை பெறவுள்ளது. தற்போதைக்கு டாடா மோட்டார்ஸில் இருந்து புதியதாக சப்-4 மீட்டர் காம்பெக்ட் செடான் மாடல் அறிமுகமாகவுள்ளதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

அதேபோல் இந்த புதிய மாடல் டிகோர் காரின் புதிய தலைமுறையா என்பதும் தெரியவரவில்லை. ஆனால் இந்த புதிய மாடல் டிகோர் செடான் மாடலுக்கு மாற்றாக இருக்கலாம் என்று மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும் இந்த புதிய செடான் கார் 2021ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2022ஆம் ஆண்டின் துவக்கத்திலோ தான் அறிமுகமாகக்கூடும்.

அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

புதிய டாடா காம்பெக்ட் செடானில் அல்ட்ராஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று-சிலிண்டர் அமைப்பை கொண்ட இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

டாடாவின் புதிய காம்பெக்ட்-செடான் மாடலிலும் இதே ஆற்றல் அளவை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த என்ஜின் வடிவமைக்கப்படலாம். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

அசத்தலான டிசைனில் புதிய செடான் ரக காரை தயாரிக்கிறதா டாடா..? கதிகலங்கும் மாருதி, ஹோண்டா...!

டாடா நிறுவனம் புதிய காம்பெக்ட் செடானின் தயாரிப்பில் ஈடுப்படுவதற்கு, இந்நிறுவனத்தின் தற்போதைய செடான் மாடலான டிகோரின் விற்பனை தொடர்ந்து சரிவை கண்டு வருவது தான் காரணமாக உள்ளது. டிகோர் மாடல் பல வருடங்களாக இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருவதே அதன் விற்பனை எண்ணிக்கை குறைவுக்கு காரணம்.

Source: Team BHP

Most Read Articles
English summary
New Tata Compact-Sedan Codenamed “Goshaq’ Under Development: To Rival The Honda Amaze
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X