2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் வேரியண்ட் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் சாலையில் உலா வந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனுடன் லெஜண்டர் என்ற பெயரில் இந்த எஸ்யூவி காரின் ஸ்பெஷல் எடிசனும் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

இதற்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ள நிலையில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் மோட்டார்பீம் செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருடன் ஒப்பிடுகையில் லெஜண்டர் ட்ரிம் கூர்மையான மற்றும் ஸ்போர்டியரான உடற் தொகுப்புகளுடன் இரட்டை-நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

மேலும் அலாய் சக்கரங்களும் கூடுதல் ஸ்டைலிஷாக காட்சியளிக்கின்றன. காரில் மிக பெரிய மாற்றம் என்று பார்த்தால், பளபளப்பான கருப்பு உள்ளீடுகள் மற்றும் பொருத்தமான முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள் உடன் புதிய நேர்த்தியான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

வழக்கமான ஃபார்ச்சூனரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் தான் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் லெஜண்டர் கம்பீரமான, செதுக்கப்பட்ட லைன்கள், புதிய கருப்பு நிற மூடுபனி விளக்குகளுடன் புதிய முன்பக்க பம்பரையும், சறுக்கு தட்டையும் பெற்றுள்ளது.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

பெரிய ட்ரெப்சாய்டல் துணை க்ரில் அமைப்பும் கருப்பு நிற பாகங்களை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் புதிய நேர்த்தியான எல்இடி டெயில்லைட்கள், பெரிய ஸ்பாய்லர் மற்றும் L-வடிவிலான பிரதிபலிப்பான் உடன் வித்தியாசமான பின்பக்க பம்பர் வழங்கப்பட்டுள்ளது.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

இதுவரை வெளிவந்துள்ள தகவல்களின்படி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் தேர்வுகள் மற்றும் 9 உடற் நிறத்தேர்வுகள் மற்றும் 3 உட்பக்க நிறத்தேர்வுகள் என மொத்தம் 10 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர்!! மீண்டும் சோதனையில்...

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரும் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு சதுர ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner Legender Spy Pics
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X