புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் பல புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலான ஆல்ஸ்பேஸ் வரும் மார்ச் 6ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

இந்த சூழலில், அடுத்ததாக ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரமும் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி வரும் மார்ச் 18ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொம்டு வரப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியானது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிக வலிமையான தோற்றத்துடன் பார்வையாளர்களை கவர்ந்தது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இரட்டை வண்ண அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

இந்த காரில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பிடிக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மேலும், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வியன்னா லெதர் இரு்ககைகள், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வருகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும் 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்திய மாடலில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 22, 2020, 17:30 [IST]
English summary
The much-awaited Volkswagen T-Roc will be launched in India on March 18, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+