தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு..

கொரோனா பாதிப்பின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் தொடர்ச்சியாக ரத்துச் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவரிசையில், தற்போது நியூயார்க் நகரத்தில் நடைபெறவிருந்த சர்வதேச வாகன கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

உலகின் மாபெறும் வாகன கண்காட்சிகளில் ஜெனிவா மோட்டார் ஷோவும் ஒன்று. இந்த ஜெனிவா வாகன கண்காட்சி இம்மாதம் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறவிருந்தது.

ஆனால், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கோவிட்-19 (கொரோனா) வைரஸின் காரணமாக இந்த பிரமாண்ட வாகன கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

ஜெனிவா வாகன கண்காட்சி ஓர் சர்வதேச நிகழ்வு என்பதால் உலகின் பல்வேறு மூலைகளில் இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இதில் பங்கேற்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டு நடைபெற இந்த நிகழ்விற்கு கோவிட்-19 வைரஸ் முட்டுக்கட்டைப் போட்டது.

இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதுமுக தயாரிப்புகளை காட்சிப்படுத்த முடியாமல் பெறுத்த ஏமாற்றுடன் திரும்பின.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

மேலும், இதற்காக செய்யப்பட்டிருந்த முன்னேற்பாட்டின் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், ஜெனிவா வாகன கண்காட்சியைப் போலவே மீண்டும் ஒரு முக்கியமான வாகன கண்காட்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கின் வாகன கண்காட்சிதான் அது.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

இந்நிகழ்வு வருகின்ற ஏப்ரல் மாதம் 10ம் தேதி அன்று தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவிருந்தது குறிப்பிடத்தகுந்தது. உலகில் நடைபெறும் முக்கிய வாகன கண்காட்சிகளில் இதுவும் ஒன்று என்பதால் இங்கு பல்லாயிரக் கணக்கானோர் கூடுவதற்காக திட்டமிட்டிருந்தனர்.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

அவ்வாறு, ஒரே இடத்தில் பலதரப்பட்ட மக்கள் கூடும்போது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏதேனும் ஓர் வழியில் பரவக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

தொடர்ந்து, இந்த சர்வதேச நிகழ்வை வரும் ஆகஸ்ட் மாதம் நிகழ்த்துவிருப்பதாகவும் நியூயார்க் வாகன கண்காட்சி நிகழ்ச்சியை அரங்கேற்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதற்கு அனைத்தும் இடையூறுகளும் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்ற அதீத நம்பிக்கையின் காரணமாக இந்த முடிவை நியூயார்க் நகரத்தின் முக்கிய அதிகாரிகள் எடுத்திருக்கின்றனர்.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

ஆகையால், நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சி வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இது செப்டம்பர் 6ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றது. முன்னதாக, ஊடகவியாளளர்களின் பார்வைக்காக 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்தே பொதுமக்களின் பார்வைக்கு வாகன கண்காட்சி திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே கோவிட்-19 வைரஸ் தொற்று காணப்பட்ட நிலையில் தற்போது 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் பாதிப்பு விரிவடைந்திருக்கின்றது.

இதில், நியூயார்க் நகரமும் ஒன்று. இங்கு வைரஸின் தொற்று சற்றே அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

இந்த நிலையில், வாகன கண்காட்சி நிகழ்வது நல்ல சூழ்நிலையை உருவாக்காது என்பதால் நியூயார்க் நகரத்தின் முக்கிய அதிகாரிகள் சர்வதேச வாகன கண்காட்சியை தள்ளி வைத்துள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற வாகன கண்காட்சியில் பல லட்சம் மக்கள் பார்வையாளர்களாக திறண்டிருந்தனர். குறிப்பாக, ஊடகத்தினர் மட்டுமே 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

உலகில் நடைபெறும் வாகன கண்காட்சியில் நியூயார்க் கண்காட்சியும் மிக முக்கியமான கண்காட்சி என்பதால் இந்நிகழ்வை பெரும்பாலானோர் தவறவிடுவதில்லை. இந்த சூழ்நிலையை கொரோனா பரவுவதலுக்கு சாதகமாகிவிடக்கூடாது. இதனாலயே முக்கிய நிகழ்வுகள் பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

அந்தவகையில், ஏற்கனவே உலகின் பல்வேறு மூலைகளில் நடைபெறவிருந்த வாகன கண்காட்சிகள் பல இதுவரை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பிடும் வகையில் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி பெய்ஜிங், ஜெனிவா, சாவோ பவுலோ ஆகிய முக்கிய வாகன கணக்காட்சிகளும்கூட ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

தொடர் கதையாகும் ரத்து சம்பவங்கள்... ஜெனிவாவை அடுத்து நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சிக்கும் ஆப்பு.. எப்படி தெரியுமா..

இதுமட்டுமின்றி, ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வாகன கண்காட்சியில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளன. இவ்வாறு, கொரோனா பரவலால் உலகம் முழுவதும் பதற்றமான சூழலே அதிகம் நிலவுகின்றது.

Source: ET Auto

Most Read Articles
English summary
New York Auto Show Cancelled Due To Covid-19. Read In Tamil.
Story first published: Wednesday, March 11, 2020, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X