புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

புதுமண தம்பதியினர் வீட்டுக்கு திரும்புக் கொண்டிருந்த வேலையில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், தம்பதியினர் இருவர் ஆற்றின் மையப்பகுதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் காரின் மீது ஏறி உதவி கேட்டவாறு நின்றிருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பார்ப்போரை ஒரு நிமிடம் உறைய வைக்கின்ற வகையில் இருந்த இந்த சம்பவம் குஜராத் மாநிலம், ஆமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடைபெற்ற தகவல் தெரிவித்தன.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த தம்பதியினர், தேசிய ஊரடங்கின் காரணமாக வெறிச்சோடி கிடக்கும் சாலையில் தங்களின் உயர்ரக காரை பரிசோதிக்கும் விதமாக அதிவேகமாக சாலையில் சீறிப் பாய்ந்துள்ளனர். அப்போதுதான் இந்த விபரீத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதற்கு எதிர்பாராத நேரத்தில் வேகத்தடையே முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. கார் அதிவேகத்தில் வந்ததால் வேகத்தடை மீது ஏறி, கட்டுப்பாட்டை இழந்து ஏறிக்குள் பாய்ந்துவிட்டது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று முழுமையாக ஒரு மாதம்கூட முடிவடையாத நிலையில், தற்போது மீண்டும் இதேபோன்றொரு சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் புதுமண தம்பதியினர் சிக்கியிருப்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், திருமணம் முடித்து வீடு திரும்பும்போதே இந்த எதிர்பாராத அனுபவம் அவர்களுக்கு நேர்ந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இது தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநரின் கவனக் குறைவினாலயே அரங்கேறியிருக்கின்றது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

ஆம், திருமண வீட்டு பணி என்பதால் மண மக்கள் குடும்பத்தினரைப் போலவே டிரைவரும் ஒர சில காரணங்களால் உறங்காமல் இருந்துள்ளார். இதன் விளைவாக திருமணம் முடிந்து வீடு திரும்பும்போது இந்த விபரீதத்தைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இதற்கு, அவரின் அரை தூக்கமும், அதிக இயக்குமுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

குஜராத் மற்றும் தற்போதைய ஜார்கண்ட் சம்பவம் இரண்டிலும் வேகமே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. எனவேதான் நாங்கள் மட்டுமல்ல பல தரப்பினர் வாகனத்தை கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அதேசமயம், வேகம் எப்போதுமே ஆபத்தைதான் விளைவிக்கும் என்பதை விளக்கும் வகையில் பல வீடியோக்களையும், அதுகுறித்த தகவலையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வெளியிட்டு வருகின்றது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

இருப்பினும், பலர் அஜாக்கிரதை காரணமாக ஏதேனும் ஓர் சூழ்நிலையில் இம்மாதிரியான தவறுகளைச் செய்து வருகின்றனர். தற்போது, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பருவ மழைப் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் போன்ற ஒரு சில மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களின் ஆறு வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையில்தான் இளம் தம்பதியினர்களின் காரில் ஆற்றில் பாய்ந்தது. அது சுமார் 500மிமீ ஆழமானது என கூறப்படுகின்றது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கயிறு போன்றவற்றின் உதவியுடன் புதுமண தம்பதிகளையும், அவர்களுடன் பயணித்த மூவரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதனை லைவ் ஹிந்துஸ்தான் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த வீடியோவைப் பார்க்கும்போது எப்படிதான் தண்ணீரில் பலர் போராடிக் கொண்டிருக்கும்போது செல்போனைப் பிடித்து வீடியோ எடுக்கத் தோன்றியதோ என கேட்கத் தோன்றுகின்றது. இருப்பினும், புது தம்பதியர்களைக் காப்பாற்ற அங்கு பலர் போராடிக் கொண்டிருப்பதைப் பாக்கையில் அந்த கேள்வி உடனடியாக மழுங்கி களப்பணியில் இருப்பவர்களைப் பாராட்டத் தோன்றும் வகையில் இருக்கின்றது.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

சம்பவம்குறித்த தகவல் அறிந்து வந்த போலீஸார் கார் ஆற்றில் பாய்ந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஆற்றில் சொருகியிருந்த ஹோண்டா சிட்டி காரையும் மூட்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த சம்பவத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் காரின் கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்து பூட்டப்பட்டிருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். பின்னர், ஆயுதங்களை வைத்து ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட பின்னரே அவர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

புதுமண ஜோடிக்கு இப்படியொரு நிலமையா..? இத வீடியோ எடுக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!

விபத்து போன்ற இக்கட்டான நேரங்களில் காரின் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறப்பது மிகுந்த சிரமமான காரியமாக மாறிவிடும் இதே நிலைதான் இந்த சம்பவத்திலும் அரங்கேறியிருக்கின்றது. இதுமாதிரியான சூழல்களைக் கையாளவே கண்ணாடிகளை உடைக்கும் 'மிர்ரர் பிரேக்கர்' கருவியை எப்போதும் கை வசம் காரில் வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. இது இருந்திருந்தால் உள்ளூர்வாசிகளின் பணி சற்று சுலபமாக முடிவடைந்திருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Newly Wed Couple Honda City Plunges Into A River. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X