புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்!
புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்கள் விரும்பப்படுகிறது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் பிரிமீயம் மாடலாக இருப்பதால், தனி மதிப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோஎக்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மேலும், புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மாடலாக வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் முகப்பில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், புதிய டெயில் லைட்டுகள், முரட்டுத்தனமான தோற்றத்தை தரும் அளாய் வீல்கள் என தற்போதைய மாடலில் இருந்து அதிக வேறுபாடுகளை சந்தித்துள்ளது.

உட்புறத்திலும் முற்றிலும் புதிய டிசைனில் வர இருக்கிறது. வரிகள் போன்ற டிசைனுடன் டேஷ்போர்டு, 10.25 அங்குல திரைகளுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை மிக பிரிமீயமாக மாற்றியிருக்கிறது.

இந்த காரில் ஹூண்டாய் நிறுவனத்தின் புளூலிங்க் என்ற கனெக்டெட் கார் செயலி வழங்கப்படும். க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை டாப் வேரியண்ட்டில் வழங்கப்படும்.

புதிய தலைமுறை எலைட் ஐ20 காரில் ஸ்மார்ட் சென்ஸ் என்ற பாதுகாப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. முன்புறத்தில் மோதல் வாய்ப்புகளை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இது அமையும். தவிரவும், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறும்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இந்த எஞ்சினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இடம்பெற இருக்கிரது. 6 ஸ்பீடு இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும்.

அடுத்து, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்பட இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிகக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார்களுடன் போட்டி போடும். தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








