தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா நிறுவனம் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலை அடுத்த வருட துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக இந்த எஸ்யூவி கார் தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த வகையில் தற்போது மீண்டும் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் இந்த கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இருப்பினும் காரின் சில பாகங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. இதில் முக்கியமானதாக இரும்பு ரிம்கள் உள்ளன. இதனால் இந்த சோதனை எக்ஸ்யூவி500 மாடல் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம்.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த இரண்டாம் தலைமுறை எஸ்யூவி மாடல் புத்தம் புதிய மோனோகோக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி இருந்தது. முதல் தலைமுறை எக்ஸ்யூவி500 மாடல் கடந்த 2011ல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்தது.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

அதன்பின் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு பெரிய அளவிலான இயந்திர மாற்றங்கள் இந்த எஸ்யூவி மாடலில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி புதியதாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே டீசல் என்ஜின் உடன் தான் மிக விரைவில் 2020 மஹிந்திரா தார் மாடலும் அறிமுகமாகவுள்ளது.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

ஆனால் இந்த டீசல் என்ஜின் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலில் வேறுப்பட்ட ட்யூனிங்கில் பொருத்தப்படவுள்ளது. அதாவது 170 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படலாம். தற்போதைய எக்ஸ்யூவி500 காரில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

அதிகப்பட்சமாக 155 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் புதிய எக்ஸ்யூவி500 மாடலில் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டமும் கூடுதல் தேர்வாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021மை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலுக்கு போட்டியாக டாடா கிராவிட்டாஸ், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களும் சந்தையில் களமிறங்க தயாராகி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, June 26, 2020, 9:30 [IST]
English summary
2021 Mahindra XUV500 spied testing yet again ahead of launch
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+