மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் செலிரியோ ஹேட்ச்பேக் மாடலின் புதிய தலைமுறை கார் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி 2015ல் முதன்முதலாக செலிரியோ ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து மாருதி தயாரிப்புக்கு நல்லப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

இந்த நிலையில் இதன் புதிய தலைமுறையின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. புதிய செலிரியோவின் அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய தலைமுறை பலமுறை இந்தியாவில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளதை பார்த்துள்ளோம்.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

இந்த வகையில் தற்போது மீண்டும் முழு மறைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்களை இந்தியன் ஆட்டோ செய்திதளம் வெளியிட்டுள்ளது. இதில் கார் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தாலும் காரின் மொத்த தோற்றமும் நன்றாகவே புலப்படுகிறது.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

இதன்படி பார்க்கும்போது காரின் மொத்த வடிவம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காரின் உயரம் தற்போதைய செலிரியோவை காட்டிலும் சிறிது அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை காரில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இது புதிய செலிரியோவின் ஆரம்ப நிலை வேரியண்ட்டாக இருக்கலாம்.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

புதிய தலைமுறை செலிரியோ முன் மற்றும் பின்புறத்தில் திருத்தியமைக்கப்பட்ட பம்பர்களை பெற்றுவரும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஸ்டைலிஷான அலாய் சக்கரங்கள், எல்இடி டெயில்லைட்கள், பின்புறத்தில் வைபர் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒஆர்விஎம்கள் உள்ளிட்டவையையும் புதிய செலிரியோ பெற்று வரலாம்.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

இதேபோல் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய புதிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபேப்ரிக் உள்ளமைவு, ஆட்டோமேட்டிக் ஏசி, ஸ்டேரிங்கில் சில கண்ட்ரோல்கள், இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், பார்க்கிங் கேமிரா உதவி, ஸ்பீடு சென்சார், ஏபிஎஸ், இபிடி உள்பட ஏகப்பட்ட வசதிகளை புதிய செலிரியோவில் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

இயக்க ஆற்றலுக்கு 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜினை 2021 செலிரியோ கார் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கொடுக்கப்படவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 66 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

இந்த பெட்ரோல் என்ஜின் உடன் சிஎன்ஜி என்ஜின் தேர்வும் இந்த ஹேட்ச்பேக் காருக்கு அறிமுகத்திற்கு பிறகு வழங்கப்படலாம். மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ உள்ளிட்டவற்றுடன் ப்ளாட்ஃபாரத்தை புதிய செலிரியோ பகிர்ந்து கொள்ளவுள்ளது.

மீண்டும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ சோதனை ஓட்டம்... முழு விபரம் உள்ளே...

செலிரியோ போன்ற சிறிய ரக கார்களுக்கு இந்திய சந்தை எப்போது ஏற்றதாக மாறுகிறதோ அப்போது புதிய செலிரியோவை மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கும். புதிய செலிரியோவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki YNC (Next-Gen Maruti Celerio) Spied On Test
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X