உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்! துணிச்சலான அறிவிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஓர் நாடு வெளியிட்டுள்ளது. அது எந்த நாடு என்பதை இந்த பதிவில் காணலாம்.

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு... எந்த நாடு தெரியுமா?

உள்நாட்டு வாகன சந்தையை விரிவாக்கம் செய்யும் வகையில் குறிப்பிட்ட நாடு ஒன்று மிகவும் துணிச்சலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, உள்நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே இனி அரசுகள் வாங்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு... எந்த நாடு தெரியுமா?

புதிய வாகனங்களின் அதிகபட்ச விலையைக் குறைக்கும் விதமாக நைஜீரியா அரசு கடந்த 2013ம் ஆண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் அதிகபட்ச வரியைக் குறைத்தது. 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி செய்யப்படும் புது முக வாகனங்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு... எந்த நாடு தெரியுமா?

இந்த நிலை உள்நாட்டு வாகன உற்பத்தியை ஊக்குவிக்க தவறிவிட்டது. எனவே உள் நாட்டு வாகன உற்பத்தி அதலபாதாளத்தில் வீழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று.

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு... எந்த நாடு தெரியுமா?

எனவே, அங்கு வாகன தேவை என்பது சற்று கூடுதலாக உள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் ஆண்டு ஒன்றிற்கு மட்டும் 7,20,000 வாகனங்களின் தேவை இருக்கின்றது. ஆனால், அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் மூலமாக வெறும் 14,000 வாகனங்கள் மட்டும் ஆண்டுக்கு வெளியேற்றப்படுகின்றது.

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு... எந்த நாடு தெரியுமா?

இதுபோன்ற காரணங்களால் நைஜீரியாவில் தற்போது பெருமளவில் பண வீக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலேயே நைஜீரியா அரசு உள்நாட்டு வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு... எந்த நாடு தெரியுமா?

நைஜீரியா நாட்டு அரசின் இந்த முடிவு, இறக்குமதி வாகனங்களை விற்பனைச் செய்யும் டீலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வரேவற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nigeria Introduce New Policy For Government To Buy Only Locally Assembled Cars. Read In Tamil.
Story first published: Tuesday, November 24, 2020, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X