புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த மோசமான தருணத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி சிறப்பு கடன் மற்றும் காப்பீட்டு திட்டங்களை நிஸான் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

கொரோனா பிரச்னையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கார் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், வேலை இழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மனதில் வைத்து கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப் போடும் வாய்ப்புள்ளது.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

இதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் கார் வாங்கும் வகையில் சில சிறப்புத் திட்டங்களை நிஸான் கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், சில குறிப்பிட்ட கார் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மாதத் தவணையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மாதத் தவணை செலுத்த துவங்கும் வாய்ப்பை இந்த கடன் திட்டம் வழங்குகிறது. கார் கனவுடன் இருப்பவர்கள் அடுத்த சில மாதங்களில் பொருளாதாரத்தை சீர்படுத்திக் கொள்ளலாம் என்பவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

மற்றொரு கார் கடன் திட்டத்தில், வேலை இழப்பு அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. அதாவது, கார் வாங்கிய பின்னர் வேலை இழப்பு அல்லது உடல்நல பிரச்னையால் வாடிக்கையாளர் பாதித்தால் சில மாதங்கள் கடன் தவணையை காப்பீடு மூலமாக கட்டுவதற்கான வாய்ப்பை இந்த திட்டம் வழங்கும்.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

மேலும், பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, இருப்பில் உள்ள கார்களை விற்பனை செய்வதற்காக ஸீரோ மைல் கார் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது நிஸான். இதன் மூலமாக கூடுதல் சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

இந்த சிறப்புச் சலுகைகளை தவிர்த்து, வாடிக்கையாளர்களின் கார்களை சர்வீஸ் மையங்களுக்கு எடுத்து வந்து சர்வீஸ் செய்து திரும்ப வீட்டில் ஒப்படைப்பதற்கான பிக்கப் டிராப் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் தொற்று கார் மூலமாக பரவாத வகையில், மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளுடன் குறைவான கட்டணத்தில் செய்து தரப்படும் என்று நிஸான் தெரிவித்துள்ளது.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

மாத சம்பளதாரர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், அரசு ஊழியர்கள், சுயதொழில் புரிவோர், காவல்துறை மற்றும் விவசாயிகள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் தனித்தனியான கடன் மற்றும் சேமிப்புச் சலுகைகளை வழங்குவதாகவும் நிஸான் தெரிவித்துள்ளது.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

இதுகுறித்து நிஸான் இந்தியா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்,"வாடிக்கையாளர்கள், டீலர்கள், பணியாளர்கள் நலனில் எப்போதுமே அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். இந்த இக்கட்டனா தருணத்தில் அனைவரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து வர்த்தக செயல்பாடுகளை செய்து வருகிறோம்.

புதிய நிஸான் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிப்பு!

மேலும், வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் மூலமாக கார் வாங்கும் நடைமுறை மிக எளிதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த சவாலான நேரத்தில் இந்த திட்டங்கள் பயன் தரும்," என்று தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 16, 2020, 11:28 [IST]
English summary
Nissan India introduces new car finance schemes in the country to support purchases during the on-going Covid-19 in the country. The company has partnered with various financial institutions and is now offering a range of schemes suitable for customer needs across India.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+