இந்த டிசம்பரில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கினால் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி மாடல்களுள் ஒன்றாக விளங்கிவரும் நிஸான் கிக்ஸ் மாடலுக்கான 2020 இறுதி மாத சலுகைகள் ரூ.65,000 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த டிசம்பரில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கினால் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

அப்டேட் செய்யப்பட்ட நிஸான் கிக்ஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு இந்த கார் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த டிசம்பரில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கினால் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

இதனால் நிஸானின் இந்த எஸ்யூவி காரை சாலையில் அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. இதனை சரிப்படுத்தும் நோக்கிலும் கிக்ஸிற்கு 2020 டிசம்பர் மாதத்திற்கான சலுகைகளை நிஸான் அறிவித்துள்ளது.

இந்த டிசம்பரில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கினால் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

2021 புத்தாண்டையும் மனதில் வைத்து வெளியிடப்பட்டுள்ள சலுகை அறிவிப்பின்படி இந்த மாதத்தில் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இதில் ரூ.15,000 மதிப்பிலான பணம் தள்ளுபடி மற்றும் ரூ.50,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் சலுகைகள் அடங்குகின்றன.

இந்த டிசம்பரில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கினால் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

ஆரம்பத்தில் நிஸான் கிக்ஸ் ஒரே ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும்தான் கிடைத்தது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி மற்றும் 146 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த டிசம்பரில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கினால் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

ஆனால் தற்போது இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்விலும் இந்த எஸ்யூவி கார் விற்பனைக்கு கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 154 பிஎச்பி மற்றும் 256 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டர்போ என்ஜின் உடன் சிவிடி மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்த டிசம்பரில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கினால் ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

முன்னதாக நிஸான் கிக்ஸில் 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்பட்டது. டர்போ பெட்ரோல் என்ஜினினால் டீசல் என்ஜினை போல் எரிபொருளும் சிக்கனமாக செலவாகிறது. இருப்பினும் டீசல் என்ஜின் தேர்வு இல்லாமல் நிஸான் கிக்ஸின் விற்பனை எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan kicks Discounts December Offers
Story first published: Tuesday, December 8, 2020, 1:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X