வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

கொரோனா பிரச்னையால் இருந்த இடத்தில் இருந்தே நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

கொரோனா ஏற்படுத்தியுள்ள பிரச்னையால் சமூக இடைவெளியும், வெளி இடங்களில் செல்வதில் பாதுகாப்பு பிரச்னையும் எழுந்துள்ளது. மேலும், தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

இதனை மனதில் வைத்து கார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே கார்களை ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோர் டெலிவிரி பெறும் வசதியை அனைத்து நிறுவனங்களும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், நிஸான் கார் நிறுவனமும் ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

இது சாதாரண மொபைல் ஆப் மூலமாக புக்கிங் செய்து வாங்குவது போல அல்லாமல், கார்களை 360 டிகிரி கோணத்தில் பார்த்து, சிறப்பம்சங்களை தெரிந்து கொண்டு வாங்கும் வகையில் நிஸான் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

மேலும், கார்களை பார்த்து தெரிவு செய்த பின்னர், அங்கேயே முன்பதிவு செய்யவும், பணத்தை ஆன்லைன் மூலமாகவே கட்டுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் காரை வீட்டிலேயே டெலிவிரி பெற முடியும்.

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

நிஸான் கிக்ஸ், ஜிடிஆர் கார்களும், டட்சன் கார்களையும் இந்த வசதி மூலமாக இருந்த இடத்தில் இருந்தே முன்பதிவு செய்து வாங்க முடியும். ஷோரூமிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அருகாமையிலுள்ள ஷோரூமை தேர்வு செய்தால் போதுமானது. டீலரிலிருந்து விற்பனை பணியாளர் விளக்கமும், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வார்.

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

ஆன்லைன் மூலமாகவே நிஸான் கார்களுக்கு அந்நிறுவனத்தின் சொந்த பைனான்ஸ் நிறுவனம் மூலமாக கார் கடன் செய்து தரும் வசதியும் ஆன்லைன் மூலமாகவே செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், ஷோரூமிற்கு செல்வதற்கான அவசியம் தவிர்க்கப்படுகிறது.

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

அண்மையில்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, அதிசெயல்திறன் மிக்க 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே புதிய நிஸான் கார்களை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!

மேலும், நிஸான் கனெக்ட் என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு தகவல்களை பெறுவதற்கும், காரின் எஞ்சின், கதவுகளை ரிமோட் முறையில் இயக்குவதற்கான வசதிகளையும் இந்த அப்ளிகேஷன் வழங்கும். நிஸான் கிக்ஸ் கார் ரூ.9.49 லட்சம் முதல் ரூ.1.4.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரை முன்பதிவு செய்ய விழைவோருக்கு இந்த ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து வாங்கும் திட்டம் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 22, 2020, 11:07 [IST]
English summary
Nissan India has launched a new digital car booking and buying service to enhance its customer experience. This digital platform will help bring the showroom straight to the customers' home. Customers can experience the all-new KICKS 2020 through this platform. It has also made its entire Datsun portfolio available for online bookings and purchases.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+