நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

பவர்ஃபுல் எஞ்சினுடன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், நிஸான் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் இருக்கும் சில குறைபாடுகளால் இந்த எஸ்யூவி போதிய விற்பனை எண்ணிக்கையை பெறமுடியாத நிலை உள்ளது.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை அதிக மதிப்புடைய மாடலாக நிலைநிறுத்தும் முயற்சியில் நிஸான் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இதன் ரகத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த எஞ்சினுடன் கிக்ஸ் எஸ்யூவியை விரைவில் களமிறக்க உள்ளது நிஸான்.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

அதாவது, பிஎஸ்6 தரத்திற்கு இணையாக சக்திவாய்ந்த புதிய எஞ்சின் தேர்வுடன் கிக்ஸ் எஸ்யூவியை கொண்டு வருகிறது நிஸான். அண்மையில் இந்த மாடல் வருகையை நிஸான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த சூழலில், தற்போது இந்த புதிய எஞ்சினின் மைலேஜ் உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் பைலட் ஆன் வீல்ஸ் என்ற ஆட்டோமொபைல் யூ- ட்யூப் தளம் வெளியிட்டுள்ள இந்த காரின் புரோஷர் மூலமாக தெரிய வந்துள்ளது.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் புத்தம் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த எஞ்சின் லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜ் வழங்கும் என்றும் புரோஷர் தகவல் தெரிவிக்கிறது.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

மேலும், நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பிரிமீயம் மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இதில், 1.3 லிட்டர் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வானது எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆகிய வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்பட உள்ளதும் புரோஷர் மூலமாக தெரிய வந்துள்ளது.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த எஞ்சின் தவிர்த்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த எஞ்சின் 106 பிஎஸ் பவரை வெளிப்படுத்துவடன், 14.01 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் விலை குறைவான வேரியண்ட்டுகளாக நிலைநிறுத்தப்படும். அதாவது, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் காரில் வழங்கப்படுவது போன்ற இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் வருகிறது. ஆனால், டீசல் எஞ்சின் விலக்கப்பட்டுள்ளது.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் சாஃப் டச் டேஷ்போர்டு, ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நிஸான் கனெக்ட் செயலி, டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட்டுகள் வழங்கப்படும்.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

முதல்முறையாக இதன் ரகத்தில் ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் சுவிட்ச் மற்றும் ஐட்லிங் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டமும் கொடுக்கப்பட உள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு விரைவில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியிலும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 15ந் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு, இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் சந்தையில் புதிய அத்யாயத்தையும், பிற நிறுவனங்களுக்கு போட்டியையும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 2, 2020, 10:31 [IST]
English summary
Nissan Kicks BS6 engine options and other features details leaked online ahead of its launch in India.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+