இந்தியாவின் பவர்ஃபுல் காம்பேக்ட் எஸ்யூவி... புதிய நிஸான் கிக்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்
கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் பிஎஸ்6 எஞ்சினுடன் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வந்துள்ளது. தற்போதைக்கு காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் டர்போ மாடல்தான் அதிசக்திவாய்ந்த தேர்வாக இருக்கிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது எக்ஸ்எல், எக்ஸ்வி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இதன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலின் மேனுவல் மாடலானது எக்ஸ்வி, எக்ஸ்வி பிரிமீயம், எக்ஸ்வி பிரிமீயம் ஆப்ஷனல், எக்ஸ்வி பிரிமீயம் ஆப்ஷனல் டியூவல் டோன் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இந்த காரில் 1.3 லிட்டர் டர்போ மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். இந்த மாடலானது எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. மேலும், இந்த மாடல் லிட்டருக்கு 14.1 கிமீ மைலேஜ் வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்து வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சக்திவாய்ந்த 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த சிவிடி மாடலானது லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் ரெகனிஷன் வசதி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

இதுதவிர்த்து, நிஸான் கனெக்ட் செயலி மூலமாக 50 விதமான வசதிகளை பெற முடியும். இதில், ரிமோட் முறையில் வெளியில் இருந்தே எஞ்சினை ஆன் செய்வதற்கும், ஆஃப் செய்வதற்குமான வசதி, கதவுகளை பூட்டும் வசதிகள் கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஐட்லிங் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் என எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கார் பிளேடு சில்வர், நைட் ஷேடு, பிரான்ஸ் க்ரே, ஃபயர் ரெட், பியர்ல் ஒயிட் மற்றும் டீப் புளூ பியர்ல் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். மேலும், பிரான்ஸ் க்ரே - ஆம்பர் ஆரஞ்ச், ஃபயர் ரெட் - ஓனிக்ஸ் பிளாக் மற்றும் பியர்ல் ஒயிட் - ஓனிக்ஸ் பிளாக் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.
| Nissan Kicks Variant | Price (Ex-Showroom) |
| 1.5 XL | Rs 9,49,990 |
| 1.5 XV | Rs 9,99,990 |
| 1.3 Turbo XV | Rs 11,84,990 |
| 1.3 Turbo XV Premium | Rs 12,64,990 |
| 1.3 Turbo XV Premium (O) | Rs 13,69,990 |
| 1.3 Turbo XV Premium (O) Dual Tone | Rs 13,89,990 |
| 1.3 Turbo XV CVT | Rs 13,44,990 |
| 1.3 Turbo XV Premium CVT | Rs 14,14,990 |

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பிஎஸ்6 மாடலானது ரூ.9.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் ரூ.11.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த மாத இறுதியில் டெலிவிரி பணிகள் துவங்கப்படும். ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு இணையான ரகத்தில் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








