அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்... அதிகாரப்பூர்வ தகவல்கள்!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க விற்பனையை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் நிஸான் களமிறங்கி உள்ளது. பிஎஸ்6 விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நிஸான் டெரானோ விற்பனையை நிறுத்தி உள்ள அந்த நிறுவனம், கிக்ஸ் எஸ்யூவியை மதிப்பு வாய்ந்த தேர்வாக நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

இதற்காக அதிக சிறப்பம்சங்கள், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளுடன் கிக்ஸ் எஸ்யூவியை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது நிஸான். அதற்கு முன்னதாக இந்த எஸ்யூவியின் பல முக்கிய விபரங்களை நிஸான் வெளியிட்டுள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

2020 மாடலாக வர இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது பிஎஸ்-6 தரமுடைய இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வர இருக்கின்றன.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி XL, XV, XV Premium மற்றும் XV Premium (O) ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அதேநேரத்தில், எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் வசதிகளை பொறுத்து 7 விதமான தேர்வுகளில் கிடைக்கும்.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் 2020 மாடலில் பிஎஸ்6 தரமுடைய 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்த எஞ்சின் கொண்ட மாடலானது காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். இந்த மாடல் லிட்டருக்கு 14.1 கிமீ மைலேஜ் வழங்கும்.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் கவர்ச்சிகரமான முன்புற க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சில்வர் கலர் ஸ்கிட் பிளேட்டுKல், ரூஃப் ரெயில்கள், 17 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்!

உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெககனிஷன் வசதிகளுடன் நிஸான் கனெக்ட் தொழில்நுட்பமும் இதன் மதிப்பை கூட்டும் விஷயமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 8, 2020, 16:30 [IST]
English summary
Nissan India has officially revealed the Kicks BS6 in the Indian market. The upcoming SUV will feature a host of upgrades over the previous-gen BS4 models. The Nissan Kicks BS6 will be offered in four variants, and two engine and transmission options to choose from.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+