பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க..

டெஸ்ட் டிரைவ்விற்காக நிஸான் நிறுவனத்தின் பிரபல கார்கள் உங்கள் வீடு தேடி வரவிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம், அண்மையில் அதன் கிக்ஸ் என்ற புத்தம் புதிய எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

தற்போது, இந்த காரை இந்தியர்கள் மத்தியில் பிரபலபடுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகின்றது.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

அந்தவகையில், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக டூர் ஸ்டெப் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை அது அறிமுகம் செய்துள்ளது. ஆகையால், பிட்ஸா மற்றும் பர்கரைப் போன்று இனி டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு நிஸான் நிறுவனத்தின் கிக்ஸ் காரும் இனி உங்கள் தேடி வரவிருக்கின்றது.

இதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான நாள் மற்றும் நேரத்தை நிஸானின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் முன் பதிவு செய்தாலே போதும்.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

நிஸான் நிறுவனத்தின் ஊழியர்கள் உங்களை தேடி புத்தம் புதிய காரை கொண்டு வந்து டெமோ கொடுப்பனர். மேலும், டெஸ்ட் டிரைவ் செய்யவும் வழங்குவர். தற்போது முன்னோட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

இந்த சேவைக்காக நிஸான் நிறுவனம் ஓரிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, உலகளவில் வாடகை வாகனங்களுக்கு புகழ்பெற்ற நிறவனம் ஆகும். முன்னதாக இதே நிறுவனத்துடன் மற்றொரு சேவைக்காகவும் நிஸான் கூட்டணி வைத்தது.

அந்த கூட்டணி, நிஸான் நிறுவனத்தின் அனைத்து விதமான கார்களையும் லீஸுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டது.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

தற்போது, நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த புதிய கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் ஷோரூம் சென்று நேரத்தை வீணடிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

இதுகுறித்து நிஸான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, "நிஸான் நிறுவனம் புதுமையான மற்றும் விதிவிலக்காக அமைகின்ற வகையில் பல்வேறு விசயங்களை மேற்கொண்டு வருகின்றது. இது விற்பனைக்கு முன் மற்றும் பின் பயனளிக்கின்ற வகையில் இருக்கின்றது. அந்தவகையில், மீண்டுமொரு தனித்துவமான திட்டத்தை நிஸான் அறிமுகம் செய்துள்ளது" என்றார்.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

நிஸான் நிறுவனத்தின் இந்த சேவையை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பெற முடியும். இதற்கான முன்பதிவை நிஸான்.இன் என்ற வலைதளப்பக்கத்தில் செய்ய வேண்டும். மேலும், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பரிமாறினால் போதுமானது. நிஸான் ஊழியர்கள் உங்களைத் தேடி புதிய கார்களைக் கொண்டு வருவர். அது வீடாக அல்லது அலுவலகம் என எந்த இடமாக இருந்தாலும் அவர்கள் உங்களை தேடி வருவார்கள்.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

நிஸான் அதன் கிக்ஸ் எஸ்யூவி ரக காரை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில் அது தற்போது ஆயத்தமாகியுள்ளது. மேலும், ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தொழிற்சாலைக்கு அருகில் அந்த காரை பல பரீட்சையும் செய்து வருகின்றது.

நிஸான் கிக்ஸ் தற்போது எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் பிளஸ் என நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் அது கிடைக்கின்றது. இதன், 1.5 லிட்டர் எச்4கே பெட்ரோல் எஞ்ஜின் 106 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் கார் 110 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

இதில், பெட்ரோல் எஞ்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்சனிலும், டீசல் எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கின்றது.

நிஸான் நிறுவனம் அதன் டெர்ரேனோ மாடலுக்கு மாற்றாகவே கிக்ஸ் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் களமிறக்கியது. இது, இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி500, ரெனால்ட் கேப்சர் மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கின்றது.

பீட்சா, பர்கர் போல் வீடு தேடி வரும் நிஸான் கிக்ஸ்... டெஸ்ட் டிரைவ்வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...

இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்த கார் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடையாமல் விற்பனைச் சரிவைச் சந்தித்து வருகின்றது. ஆகையால், தொலைதூர வாடிக்கையாளர்களையும் கவரும் விதமாக நிஸான் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Kicks DoorStep Test Drive. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X