பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்.. அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்.. இப்பவே புக் பண்ணிடலாமா?

அதிசெயல்திறன் மிக்க டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு வந்துள்ள புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியை தேர்வு பட்டியலில் வைத்திருப்போருக்கு ஏதுவாக, இந்த காரில் வழங்கப்படும் வேரியண்ட் வாரியான வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி புதுப்பொலிவுடன், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. மேலும், புதிய பிஎஸ்6 எஞ்சின் தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது XL, XV, XV Premium மற்றும் XV Premium (O) ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் வசதிகளை தொடர்ந்து பார்க்கலாம்.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

நிஸான் கிக்ஸ் எக்ஸ்எல் வேரியண்ட்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டாக எக்ஸ்எல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே இந்த வேரியண்ட் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், இரண்டு 12V பவர் சாக்கெட்டுகள், டில்ட் வசதியுடன் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரிமோட் கீ, எல்இடி பகல்நேர விளக்குகள் வழங்கப்படுகின்றன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

மேலும், ஸ்பாய்லர், ஹாலஜன் ஹெட்லைட்டுகள், ஃபுல் வீல் கவருடன் கூடிய 16 அங்குல ஸ்டீல் வீல்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ், பிளாக் அப்ஹோல்ஸ்ட்ரி, ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் டீஃபாகர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், இபிடி, பிரேக் அசிஸ்ட் வசதியுடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், 2 டின் ஆடியோ சிஸ்டம், நிஸான் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

நிஸான் கிக்ஸ் எக்ஸ்வி வேரியண்ட்

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் நடுத்தர விலை கொண்ட வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படுகிறது. 1.5 லிட்டர் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினின் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த வேரியண்ட் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ரியர் வைப்பர், 17 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள், முன்புற பனி விளக்குகள், ரியர் வியூ கேமரா, கப் ஹோல்டர்களுடன் ரியர் ஆர்ம் ரெஸ்ட், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் வாய்ஸ் ரெககனிஷன், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்டுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

இந்த எக்ஸ்வி வேரியண்ட்டானது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் கூடுதலாக ஐடில் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம், ஸ்மார்ட் கார்டு கீ லெஸ் என்ட்ரி, ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

புதிய நிஸான் கிக்ஸ் எக்ஸ்பி பிரிமீயம்

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலின் மேனுவல் மற்றும் சிவிடி தேர்வுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் முறையில் மடங்கிக் கொள்ளும் ரியர் வியூ மிரர்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன்புறத்தில் கூடுதலாக ட்வீட்டர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

நிஸான் கிக்ஸ் எக்ஸ்வி பிரிமீயம் ஆப்ஷன் பேக்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் அதிகபட்ச வசதிகள் கொண்ட மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக உள்ளது. 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இதில், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், கருப்பு மற்றும் பழுப்பு வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி, சைடு ஏர்பேக்குகள், வளைவுகளில் திரும்பும்போது ஒளியை பாய்ச்சும் கார்னரிங் வசதியுடன் கூடிய முன்புற பனி விளக்குகள் உள்ளன.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

நிஸான் கிக்ஸ் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. டீசல் எஞ்சின் தேர்வு கிடையாது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பேஸ் மாடலில் திக்குமுக்காட வைக்கும் வசதிகள்... அசத்தும் புதிய நிஸான் கிக்ஸ்... இப்பவே புக் பண்ணிடலாமா?

விலை விபரம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.9.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. போட்டியாளர்களைவிட அதிக மதிப்புமிக்கதாக இதன் பேஸ் வேரியண்ட் வந்துள்ளது. மேலும், இதன் டர்போ பெட்ரோல் மாடல் அதிசெயல்திறன் மிக்க காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக முன்னிறுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 22, 2020, 17:28 [IST]
English summary
Here are the variant-wise features of the Nissan Kicks Facelift model.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+