நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

நிஸான் மேக்னைட் காருக்கான ஆக்ஸஸரீ தொகுப்புகள் அவற்றின் விலைகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

மிக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிஸான் நிறுவனம் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரை இந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (O) என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மேக்னைட்டிற்கு டெக் பேக் என்ற ஆக்ஸஸரீ தொகுப்பை ஏற்கனவே நிஸான் நிறுவனம் வழங்கியிருந்தது.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

இந்த நிலையில் தற்போது இந்த செய்தியில் மேக்னைட்டிற்கு வழங்கப்பட்டுள்ள தனிபயன்பாட்டு தொகுப்பையும், முக்கியமான ஆக்ஸஸரீ தொகுப்பையும், ஸ்டைலிங் தொகுப்பையும் பார்க்க போகிறோம்.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

முக்கியமான ஆக்ஸஸரீ தொகுப்பு

நிஸான் நிறுவனம் மட் ஃப்ளாப்ஸ் மற்றும் தரை & மேற்கூரைக்கான பாய்களை முக்கியமான ஆக்ஸஸரீ கிட்-ஆக வழங்குகிறது. இந்த ஆக்ஸஸரீ கிட்-ஐ வாடிக்கையாளர்கள் ரூ.2,249 என்ற விலையில் பெற்று கொள்ளலாம்.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

ஸ்டைலிங் தொகுப்பு

காரின் தோற்றத்தை மெருக்கூட்டும் வகையில் வழங்கப்படும் ஸ்டைலிங் தொகுப்பில் க்ரோம் கார்னிஷ், டெயில்கேட் நுழைவு மற்றும் டெயில்லேம்ப் காப்பான், பம்பர் கார்னர் பாதுகாப்பான் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை அனைத்தையும் ரூ.4,799ல் வாங்கி காரில் பொருத்தி கொள்ளலாம்.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

இவற்றுடன் ரூ.8,999ல் ப்ரீமியம் தொகுப்பையும், ரூ.31,999ல் அலாய் சக்கரங்களின் தொகுப்பையும் நிஸான் நிறுவனம் மேக்னைட் வாங்கும் வாடிக்கையாளருக்கு கூடுதல் தேர்வாக வழங்குகிறது. இவை மட்டுமின்றி காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை வாடிக்கையாளர்களே தங்களது விருப்பதிற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் வகையில் ஏகப்பட்ட ஆக்ஸஸரீகளையும் நிஸான் வழங்குகிறது.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

இவற்றில் முக்கியமான அம்சங்களாக காருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்படும் விளக்குகள், இருக்கை கவர்கள், காரில் ஏறுவதற்கு/இறங்குவதற்கு படிக்கட்டு, 3டி தரத்தில் தரை பாய் உள்ளிட்டவை உள்ளன. இவற்றுடன் இரட்டை-முனை மொபைல் சார்ஜர் மற்றும் கேபின் புத்துணர்ச்சியாக்குவான் போன்றவை அடங்கிய தனிப்பயன்பாட்டு பொருட்களையும் நிஸான் வழங்குகிறது.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

இவற்றின் விலைகள் ரூ.70-ல் இருந்து ரூ.999 வரையில் உள்ளன. மேக்னைட்டில் இயக்க ஆற்றல் வழங்குவதற்கு ரெனால்ட் ட்ரைபரின் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்களை நிஸான் நிறுவனம் வழங்கியுள்ளது.

நிஸான் மேக்னைட் காருடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் சேர்த்து வாங்கலாம்!! விலை எல்லாம் ரொம்ப குறைவு!

இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படுகிறது. டர்போ என்ஜினிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite SUV Accessory List And Prices Detailed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X