ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

அட்டகாசமான டிசைன் அம்சங்களுடன் புதிய நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி வர இருப்பது புதிய வீடியோ டீசர் மூலமாக தெரிய வந்துள்ளது.

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்படும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ரகத்தில் பல மாடல்கள் இருந்தாலும், அனைத்து மாடல்களும் குறிப்பிடத்தக்க அளவு விற்பனையை பெற்று வருகின்றன.

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

இதனால், அனைத்து நிறுவனங்களும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் நிஸான் கார் நிறுவனமும் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

நிஸான் மேக்னைட் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மாடலானது வரும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடல் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

இந்த நிலையில், அடுத்த 12 மாதங்களில் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் கார் மாடல்களை வரிசைகட்டி படமாக்கப்பட்ட வீடியோ டீசர் ஒன்றை நிஸான் வெளியிட்டுள்ளது. அதில், மேக்னைட் எஸ்யூவியும் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி எல்லோரையும் கவரும் வகையிலும், மிகச் சிறப்பான டிசைன் அம்சங்களுடன் வர இருப்பது இந்த டீசர் மூலமாக தெரிய வருகிறது. L-வடிவிலான பகல்நேர விளக்குகள், மெல்லிய ஹெட்லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்பு, புடைப்பான பின்புறத் தோற்றம், ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை இந்த காருக்கு சிறப்பான தோற்றத்தை பெற்றுத் தருகிறது.

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியானது ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A+ என்ற கட்டமைப்பு தாத்பரியத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காரும் இந்த கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் உருவாக்கப்பட்டது. அடுத்து ரெனோ கிகெர் எஸ்யூவியும் இந்த பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்படுகிறது.

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதுதவிர்த்து, மற்றொரு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற இருக்கின்றன. வசதிகளில் குறைவில்லாத மாடலாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 30, 2020, 10:50 [IST]
English summary
Nissan has teased the upcoming Magnite compact-SUV ahead of its launch in the Indian market.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+