புதிய இன்னிங்ஸை தொடங்கும் முனைப்பில் நிஸான்... மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி வீடியோ ரிவியூ!
இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் போட்டி போட்டு கொண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் நிஸான் நிறுவனம் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களை இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
5.50 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) நிஸான் மேக்னைட் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களுக்கு, நிஸான் மேக்னைட் விற்பனையில் சவால் அளிக்கலாம்.



Click it and Unblock the Notifications








