நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி வரும் நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் சமீப காலமாக அந்த வரவேற்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள் ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வெகு சமீபத்தில் கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய இரண்டு கார்கள் புதிதாக களமிறக்கப்பட்டன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

இதில், கியா சொனெட் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸரும் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

நிஸான் நிறுவனம் மேக்னைட் காரை பெரிதும் நம்பியுள்ளது. இந்தியாவில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்கும் என்னும் அளவிற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இந்த கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

இந்த சூழலில் புதிய நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி வரும் நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஜிக்வீல்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நிஸான் மேக்னைட் காருக்கு ஒரு சில டீலர்கள் முன்பதிவுகளை ஏற்று கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

11,000 ரூபாய் முன்பணத்துடன் இந்த அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. நிஸான் மேக்னைட் வெகு விரைவில் விற்பனைக்கு வரப்போகிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையிலேயே இது உள்ளது. நிஸான் மேக்னைட் காரின் விலை தொடர்பாக இணையத்தில் கசிந்துள்ள தகவல்களும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

இதன்படி இந்த புதிய காரின் ஆரம்ப விலை 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தெரிகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 9.55 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலை உண்மையாக இருக்கும்பட்சத்தில், நிஸான் மேக்னைட் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் நிஸான் மேக்னைட் கிடைக்கும். நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியில், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரை 2 ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

நவம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது மேக்னைட்? இணையத்தில் கசிந்த விலை உண்மையாக இருந்தால் சூப்பர்!

72 பிஎஸ்/96 என்எம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் மற்றும் 100 பிஎஸ்/160 என்எம் டர்போசார்ஜ்டு மோட்டார் என இரண்டு 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளில் நிஸான் மேக்னைட் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் நிலையில், டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் சிவிடி தேர்வும் வழங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Launch Date Leaked. Read in Tamil
Story first published: Friday, November 13, 2020, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X