நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவியின் புதிய டீசர் வீடியோ வெளியீடு! 21ல் அறிமுகம்
நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸானின் புதிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக புத்தம் புதிய மேக்னைட் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது புதிய வீடியோ தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் காரின் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ள ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ஃபாக்ஸ் சறுக்கு தட்டுகள், ரூஃப் ரெயில்கள் மற்றும் அலாய் சக்கரங்கள் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவுள்ளதால் பண்டிகை காலத்தில் ஷோரூம்களுக்கு இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட்-நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் புதிய மேக்னைட் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தில்தான் ரெனால்ட் எம்பிவி காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அறிமுகத்திற்கு முன்னதாக சில முறை சோதனை ஓட்டங்களின்போதும் புதிய நிஸான் மேக்னைட் கார் சாலையில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடார்பான வெளியாகி இருந்த ஸ்பை படங்களின் மூலம் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் பெரும்பான்மையான டிசைன்களை அதன் கான்செப்ட் மாடலில் இருந்துதான் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தி இருந்தோம். முன்பக்கம் டட்சன் கார்களை நினைவுப்படுத்துகிறது.

எண்கோண டிசைனில் பெரிய க்ரில் உடன் மேக்னைட்டின் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப், ஸ்போர்டியான வடிவில் பம்பர், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பொனெட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு பகுதியை தடிமனான க்ளாடிங், எல்இடி டர்ன் சிக்னல்கள் உடன் ஓஆர்விஎம்கள் மற்றும் மேற்கூரையில் ஸ்பாய்லர் உள்ளிட்டவை அழகுப்படுத்தும் வகையில் இந்த காரில் வழங்கப்படவுள்ளன.

இந்த எஸ்யூவி காரின் பின்பகுதிக்கு பம்பர் ஸ்போர்டியான தோற்றத்தை வழங்கும் விதத்தில் இருக்கும். மற்றப்படி காரின் உட்புற கேபின் குறித்த எந்த விபரமும் இதுவரை கிடைக்கபெறவில்லை. நமக்கு தெரிந்தவரை 8.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், 360 டிகிரி கேமிரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் காரின் உள்ளே சிறப்பம்சங்களாக வழங்கப்படும்.

விரைவில் அறிமுகமாகவுள்ள நிஸான் மேக்னைட்டில் 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த பெட்ரோ என்ஜின் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதுவே இந்த என்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்சன் 95 பிஎச்பி வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படும். இவற்றுடன் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








