2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

எந்தவொரு மறைப்புமின்றி நிஸானின் புதிய தயாரிப்பான மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

நிஸானின் புதிய மேக்னைட் எஸ்யூவி இந்திய சந்தையில் மிகுந்த விற்பனை மோதல் நடைபெற்றுவரும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னதாக இதன் உலகளாவிய அறிமுகம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

இந்த நிலையில்தான் இதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக எந்தவொரு மறைப்புமின்றி புதிய நிஸான் மேக்னைட் பொது சாலையில் அடையாளம் தற்போது காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷிஃப்ட்டிங்-கியர்ஸ் என்ற செய்திதளத்தின் மூலம் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் கார் சிவப்பு மற்றும் கருப்பு என்ற ட்யூல்-டோன் நிறத்தில் காட்சியளிக்கிறது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

மேலும் இந்த எஸ்யூவி கார் முன்னதாக கடந்த ஜூலை மாதம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கான்செப்ட் மாடலில் இருந்துதான் பெரும்பான்மையான பாகங்களை பெற்றுள்ளதையும் இந்த ஸ்பை படங்களின் மூலமாக அறிய முடிகிறது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்த இந்த எஸ்யூவி காரின் டீசர் வீடியோவில் ஆயுட்கால சோதனைகளுக்காக கார் சற்று மறைப்புகளால் மறைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமில்லாமல் வெள்ளை-நீலம் என்ற ட்யூல் பெயிண்ட் அமைப்பிலும் சமீபத்தில் புதிய நிஸான் மேக்னைட் கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டிருந்தது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் கூட்டணியின் விளைவாக உருவான சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் புதிய மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தில்தான் ட்ரைப்பர் எம்பிவி காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் இந்த எஸ்யூவி காரின் ஒட்டு மொத்த டிசைனும் ட்யூல்-டோனில் வடிவமைக்கப்பட்டு வருவதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கின்றன. அறுகோண வடிவில் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப்களுக்கு கூர்மையான தோற்றத்தினை வழங்குகின்றது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

இவை மட்டுமின்றி எல்இடி டிஆர்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட முன் பம்பர், ஃபாக்ஸ் ஸ்கிட் தட்டு, பக்கவாட்டு மற்றும் சக்கர ஆர்ச் க்ளாடிங், மேற்கூரை ரெயில்கள், மேற்கூரையில் ஸ்பாய்லர், எல்இடி டெயில்லைட்கள், பின் கதவில் மேக்னைட் முத்திரை உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்யூவி கார் ஸ்பை படங்களில் கொண்டுள்ளது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

உட்புற கேபின், கான்செப்ட் மாடலில் இருந்ததை போல் மிகவும் எளிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் ட்ராப்சாய்டல் ஏர் வெண்ட்ஸ், கருப்பு-சிவப்பு என்ற ட்யூல்-டோனில் உள்ளமைவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

இவற்றுடன் சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், 360 டிகிரியில் கேமிரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மற்ற சவுகரிய வசதிகளையும் புதிய மேக்னைட்டின் கேபினில் எதிர்பார்க்கலாம். அதேபோல் நிஸானின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டில் 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

ரெனால்ட் ட்ரைபர் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இந்த பெட்ரோல் என்ஜின் அந்த காரில் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் மேக்னைட்டில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது.

2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...

இதனுடன் இந்த பெட்ரோல் என்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்சனையும் மேக்னைட்டில் நிஸான் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜினை இந்நிறுவனம் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Uncamouflaged Spy Pics
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X