நிஸானின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்... மேக்னைட்டின் முன்புற தோற்றம் இணையத்தில் கசிவு...
நிஸான் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மாடலான மேக்னைட் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் புதிய ஸ்பை படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தெரியவந்துள்ள காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் ஈடுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பெல்ட் யுஆர் ட்ரைவ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் காரின் முன்புறத்தை தெள்ள தெளிவாக வெளிக்காட்டுகின்றன.

இந்த ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது புதிய மேக்னைட் காரின் முன்பகுதி அதன் கான்செப்ட் மாடலில் இருந்து தான் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதன் க்ரில் அமைப்பு எண்கோண டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டட்சன் தயாரிப்புகளில் இருப்பதை போன்று காட்சியளிக்கும் இந்த க்ரில் அமைப்பானது பக்கவாட்டு மற்றும் அடிப்பகுதிகளில் க்ரோம் பார்டர் உடன் உள்ளது. ஹெட்லேம்ப் அமைப்பு ஹலோஜன் யூனிட்டாக வழங்கப்பட்டுள்ளது.

முன்புற பம்பரில் L-வடிவில் க்ரோம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்பை படத்தில் இருப்பது மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் விலை குறைவான வேரியண்ட் என்பதை வெளிக்காட்டுகிறது. இவற்றுடன் இந்த படத்தில் கார் சில்வர் ஸ்கிட் ப்ளேட்டையும் கொண்டுள்ளது.

வெளிப்புறம் மட்டுமில்லாமல் உட்புறமும் ப்ரீமியம் தரத்தில் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் கேபினில் 8.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கியமான அம்சங்களாக இருக்கும். அதேநேரம் உட்புறம் போதுமான இட வசதியை கொண்டிருக்கும்.

புதிய சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தான் ரெனால்ட்டின் ட்ரைபர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ரெனால்ட்டின் புதிய எஸ்யூவி மாடலும் வெளிவரவுள்ளது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. அதேநேரம் இதன் விலை குறைவான வேரியண்ட்கள் டர்போசார்ஜ்டு அல்லாத 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெறவுள்ளன.


Click it and Unblock the Notifications








