20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

முதல் இந்திய காராக நிறுவனத்தின் புதிய லோகோவுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் 20 வருடங்களுக்கு பிறகு அதன் புதிய லோகோவை புதிய எலக்ட்ரிக் அரியா எஸ்யூவி காரின் மூலமாக அறிமுகப்படுத்தி இருந்தது. இரு பரிமாண (2டி) தோற்றத்தில் வட்ட வடிவில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய லோகோவில் நிஸான் பெயர் வழக்கம்போல் மத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

"புதிய லோகோ புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு புதுமைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை குறிக்கிறது" என்று நிஸான் கூறுகிறது. இந்த புதிய முத்திரை நிஸானின் டிஜிட்டல் மற்றும் இயற்பியல் என்ற இரு ப்ளாட்ஃபாரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

நிஸான் நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் 12 புதிய மாடல்களை உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஒன்றாக இந்திய சந்தையில் விரைவில் மேக்னைட் பி-பிரிவு காம்பெக்ட் எஸ்யூவி வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

மேலும் இந்திய சந்தையில் நிஸானின் புதிய லோகோ உடன் அறிமுகமாகவுள்ள முதல் மாடலாகவும் இது விளங்கவுள்ளது. விற்பனை போட்டி மிகுந்த பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளதால் மேக்னைட்டின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை மிகவும் குறைவாக ரூ.5.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

இதனால் ஹேட்ச்பேக் கார் பிரியர்களும் நிஸான் மேக்னைட்டின் பக்கம் சாய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேக்னைட்டில் 1.0 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ எச்ஆர்ஏ0 என்ற இரு பெட்ரோல் என்ஜின்களை தேர்வுகளாக வழங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 70 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும், டர்போ பெட்ரோல் என்ஜின் 97 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன.

20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா?

மேக்னைட்டின் அறிமுகத்துடன் நிஸான் நிறுவனம் இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கையும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் மட்டுமின்றி எலக்ட்ரிக் கார்களுக்கான புதிய தொகுப்பிற்காக பிஎம்டபிள்யூ மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்ட்களும் தங்களது லோகோக்களை மாற்றியமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, November 23, 2020, 21:47 [IST]
English summary
Nissan Magnite to debut with carmaker’s new logo design
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+